காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல் சார்பில், இன்று அதிகாலை (நள்ளிரவு) 3 மணிக்கு ஸஹர் விருந்து பரிமாறப்பட்டது.
பள்ளியைச் சுற்றியுள்ள மீனவ முஸ்லிம் குடும்பங்களின் பெண்களுக்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒவ்வொரு தட்டு (தாலம்) ஸஹர் உணவு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களைச் சார்ந்த அனைத்து ஆண்களுக்கும் பள்ளிவாசல் வளாகத்தில் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இப்பள்ளிக்காக பலவகைகளில் உழைப்பையும், உதவிகளையும் வழங்கி வரும் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் சிலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
விருந்து ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான் தலைமையில், செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, துணைச் செயலாளர் கோமான் மீரான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி துளிர் ஷேக்னாலெப்பை மற்றும் பலர் செய்திருந்தனர். |