காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் வணிகவியல் மன்றத்தின் சிறப்புக் கூட்டம், 10.08.2010 அன்று நடைபெற்றது.
இந்தியன் வங்கி மேலாளர் செந்தில் குமார் இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவி சுபா வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. மின் வங்கி இயங்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து, சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார்.
மன்றப் பொறுப்பாளரும், வணிகவியல் துறை துணை பேராசிரியையுமான ஆயிஷா நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கல்லூரியின் வணிகவியல்துறை பேராசிரியையர், இளநிலை - முதுநிலை மாணவியர் கலந்துகொண்டனர். |