அல்ஃகபர் இஸ்லாமிய நடுவத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான முழு இரவு இஸ்லாமிய கருத்தரங்கம், அதன் அழைப்பாளர் மவ்லவீ ரஹ்மத்துல்லாஹ் இம்தாதீ தலைமையில், 02.09.2010 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 03.30 மணி வரை சஊதி அரபிய்யா - தம்மாம் அல்ஃகபர் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் கூடாரத்தில் நடைபெற்றது.
முதல் அமர்வில், அல்லாஹ் யாருடன் என்ற தலைப்பில் மவ்லவீ ஜமால் முஹம்மத் மதனீ உரையாற்றினார்.
இரண்டாம் அமர்விற்கு தம்மாம் இஸ்லாமிய வழிகாட்டு நடுவத்தின் அழைப்பாளர் மவ்லவீ உவைஸ் பாக்கவீ தலைமை தாங்கினார். துவக்கமாக, முஃமின்களின் பண்புகள் என்ற தலைப்பில் அழைப்பாளர் மன்சூர் மதனீ உரையாற்றினார்.
பின்னர், இறையச்சமும்-அழுகையும் என்ற தலைப்பில் மவ்லவீ ரஹ்மத்துல்லாஹ் இம்தாதீ உரையாற்றினார்.
ஒவ்வோர் உரைக்குப் பின்பும் அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, சென்னை ஷஃபீ நன்றி கூற, கஃப்ஃபாராவுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அனைவருக்கும் சுவைமிக்க ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் காயலர்கள் உள்ளிட்ட திரளான தமிழ் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தகவல்:
தம்மாமிலிருந்து
எச்.எம்.ஸாஹிப் நவாஸ் (எல்.எஃப்.ரோடு)
படங்கள்:
தம்மாமிலிருந்து
பி.எம்.எஸ்.செய்யித் பூஸரீ (குத்துகல் தெரு) |