இலங்கை தலைநகர் கொழும்புவில் செயல்பட்டு வரும் இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சம்மாங்கோட் பள்ளி கட்டிட விரிவாக்கப் பணிக்காக இலங்கை ரூபாய் ஐம்பத்தைந்து லட்சம் வழங்குவதெனவும், முதல் தவணையாக ரூபாய் முப்பது லட்சத்தை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கவும், 24.08.2010 அன்று நடைபெற்ற காவாலங்காவின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் அத்தொகையை, அமைப்பின் செயலாளர் ஹாஜி பி.ஏ.எம்.பல்லாக் லெப்பை, துணைப் பொருளாளர் ஏ.எஸ்.புகாரீ, ஹாஜி பி.எம்.நஜ்முத்தீன், ஹாஜி எம்.எம்.மஹ்மூத் ஆகியோரங்கிய குழு, சம்மாங்கோட் பள்ளி அறங்காவலர்களுள் ஒருவரான ஹாஜி அமீர் சுல்தானிடம் வழங்கியது.
|