மக்காவிலிருந்து 4.5 கி.மீ. தூரத்தில், குதை பகுதியில், ஜம்ஜம் நீர் சுத்திகரிப்பு திட்டம் நேற்று துவக்கப்பட்டது. 800 கோடி ரூபாய் (70 கோடி ரியால்) மதிப்பீட்டில் செயல்படுத்தபட்டுள்ள இத்திட்டத்தை சவுதி மன்னர் அப்துல்லா மக்காவில் துவக்கி வைத்தார்.
தினமும் இரண்டு சுத்திகரிப்பு இணைப்புகள் மூலம் 50 லட்ச லிட்டர் அளவு ஜம்ஜம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. நான்கு நீர் பம்புகள் கொண்டு, 20 செ.மீ. இரும்பு குழாய்கள் மூலம், மக்காவில் ஹரத்திற்கு ஜம்ஜம் நீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 10 லிட்டர் கேன் கொள்ளவில், 15 லட்சம் கேன்கள் நிரப்பக் கூடிய தானியங்கி மையமும் அடங்கும். ஹஜ் யாத்திரையின் போது ஏற்படும் கூடுதல் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
புகைப்படம்:
சவுதி கெஜட் நாளிதழ் |