காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஏழை-எளியோருக்கு, ரமழான் மாத இறுதியில் ஃபித்ரா தர்மமாக உணவுப்பொதிகள் வழங்கப்படுவது வழமை.
நடப்பாண்டு ரமழான் ஃபித்ரா வினியோக ஏற்பாடுகள் குறித்து, அவ்வமைப்பின் ஃபித்ரா பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.என்.மக்கீ தெரிவித்துள்ளதாவது:-
நமது இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் கூட்டு முறையில் ஃபித்ரா தர்மம் நகரின் எளியோருக்கு வழங்கப்படவுள்ளது.
வெறுமனே அரிசி மட்டும் வழங்குவது என்றில்லாமல், பெருநாளன்று சமைப்பதற்குத் தேவையான இறைச்சி, எண்ணெய், மாவுப்பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் உள்ளடக்கிய பொதி ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த வகைக்காக, பொதுமக்களின் ஃபித்ரா ஸதக்கா தொகை திரட்டப்பட்டு வருகிறது. ஃபித்ரா ஸதக்காவாக, ஒரு நபருக்கு ரூ.75/- என்று தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமது ஃபித்ரா ஸதக்காவை நமது ஐ.ஐ.எம். மூலம் செலுத்த விரும்புவோர், சகோதரர் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் (0091 97897 84796) அவர்களிடம் தமது தொகைகளை நேரில் வழங்கி, ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த வகைக்காக மொத்தமாக நன்கொடை வழங்க விரும்புவோர்,
சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்களை 0091 94444 21283 என்ற அவரது கைபேசி எண்ணிலும்,
சகோதரர் எம்.எம்.உவைஸ் (டில்லி) அவர்களை 0091 98948 45151 என்ற அவரது கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தமது ஒப்புதலைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |