அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பாக சன்மார்க்கத் திறனாய்வு போட்டி வருகிற 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அல்ஜாமிஉல் அஸ்ஹர் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான மார்க்கக் கல்வியில் சிறார்களின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், திறனையும் அறிந்துகொள்வதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே இப்போட்டியின் நோக்கமாகும்.
போட்டிகள்
1. குர்ஆன் மனனப் போட்டி
பிரிவு 1 - 5ஆம் வகுப்பு வரை (சூரா ழுஹா முதல் நாஸ் வரை)
பிரிவு 2 - 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (அம்ம ஜுஸ்உ)
(ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழ் பிரிவு மாணவர்களுக்கு அனுமதி இல்லை)
2. கிராஅத் போட்டி (பார்த்து ஓதுதல்)
பிரிவு 1 - 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள்
பிரிவு 2 - ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்
3. வினாடி வினா போட்டி
ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள் மற்றம் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
4. பாங்கு போட்டி
பிரிவு 1 - ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்
பிரிவு 2 - 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
5. பேச்சுப் போட்டி (5 முதல் 10 நிமிடம் வரை)
பிரிவு 1 - 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
பிரிவு 2 - 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்.
(போட்டியாளரே தலைப்பை தெரிவு செய்துகொள்ள வேண்டும்)
6. திக்ருகள் - துஆக்கள் போட்டி
பிரிவு 1 - 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்
பிரிவு 2 - வயது வரம்பு இல்லை
போட்டியில் பங்கு பெற விரும்புவோர், முற்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.
09.09.2010 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு
1. அப்துல் மஜீத் மஹ்ழரி - 94420 24315
2. ஹாஃபிழ் செய்யது முஹம்மது - 99657 20740
3. இஸ்மாயீல் (தம்மாம்) - 95668 41354
4. அஸ்ஹரா ஆலிமா - 99945 45861
சிறார்களின் திறமையை அதிகப்படுத்தும் இம்முயற்சிக்கு பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்வதுடன், ஆர்வத்துடன் நீங்களும் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். வெற்றிபெறும் சிறார்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தரமான பரிசுகள் உண்டு.
முழு விபரம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இணையதளத்தில் (www.aljamiulazhar.org) காண்க.
தகவல்:
நிர்வாகம்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித்,
காயல்பட்டிணம். |