காயல்பட்டினம் நகர அ.தி.மு.க. கிளை சார்பில், நேற்று (08.09.2010) மாலை சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், ஏரல் ரமேஷ், எஸ்.எம்.அப்துல் காதிர் என்ற சின்னத்தம்பி, நகரச் செயலாளர் எஸ்.எம்.செய்யித் காஸிம், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், கே.ஏ.எஸ்.காதர், என்.எம்.அஹ்மத், ஹாஜி எல்.எஸ்.அன்வர் உட்பட நகர அதிமுக நிர்வாகிகள் திரளாக்க் கலந்துகொண்டனர்.
தகவல்:
என்.எம்.அஹ்மத்,
மரைக்கார்பள்ளித் தெரு, காயல்பட்டினம். |