இன்று நோன்புப் பெருநாள் இரவு என்றும், நாளை (10.09.2010) நோன்புப் பெருநாள் என்றும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி, ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா அரபிக்கல்லூரியின் உலமாக்கள் கலந்துகொள்ளும் நோன்புப் பெருநாள் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச் செயலாளர் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காழீயும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவரும், சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்டதாக பரவலாகப் பெறப்பட்ட தகவல்கள் குறித்து இக்கூட்டத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்யப்பட்டது. அத்தகவல்களையும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ அப்பாஸ் தூத்துக்குடியில் பிறை பார்த்ததாக கிடைத்த தகவலையும் உறுதி செய்ததன் அடிப்படையில், இன்று ஷவ்வால் தலைப்பிறை - நோன்புப் பெருநாள் இரவு என்றும், நாளை நோன்புப் பெருநாள் என்றும் ஒருமனதாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெருநாள் அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கை பின்வருமாறு:-
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ,
மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர்,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அஹ்ஸனீ,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ,
மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ,
மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃலம் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ,
மவ்லவீ ஹாஃபிழ் என்.கே.காஜா முஹ்யித்தீன் மஸ்லஹீ,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ,
மவ்லவீ ஹாஃபிழ் இர்ஷாத் ஃபாஸீ யூஸுஃபீ,
மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ,
மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன்,
மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாயிஸ் காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ,
ஹாஃபிழ் முஹம்மத் நூஹ்,
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா
மற்றும் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
|