அயோத்தி வழக்கில் இன்று (செப்டம்பர் 30) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 32 நகரங்களில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 நகரங்கள் பதட்டமான பகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது. அவை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வேலூர், ஓசூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் உள்ள முத்துப்பேட்டை என கண்டறியப்பட்டு கூடுதலாக பாதுகாப்புக் கென்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் பதட்டமான பகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பதட்டம் குறையும் வரை இந்த சட்டம் அமலில் இருக்கலாம். இதுபோல இன்றும், நாளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
|