தமிழகத்தில், மின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, பகுதி வாரியாக சுழற்சி முறையில் தினசரி மின்தடை செய்யப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தில், செப்டம்பர் மாதத்தில், தினமும் நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்பட்டு வந்தது.
பகுதிவாரியாக, மாதந்தோறும் சுழற்சி முறையில் நேரமாற்றம் செய்வது என்ற அடிப்படையில், காயல்பட்டினம் பகுதிகளான காயல்பட்டினம் நகரம், ஓடக்கரை, காட்டு மகுதூம் பள்ளி ஆகிய இடங்களில், 01.10.2010 முதல், மதியம் 02.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |