காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் பொதுக்குழுக் கூட்டம் 16.09.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, வெளிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் 16.09.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, பள்ளியின் வெளி வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.உவைஸ், பாலப்பா அபுல்காஸிம், பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா, ஹாஜி டூட்டி அஹ்மத் ஸாஹிப், ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், ஹாஜி வி.பி.எம்.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எல்.எஸ்.முஹம்மத் இர்ஃபான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது. தொன்றுதொட்டு பேணப்பட்டு வரும் இப்பள்ளிவாசலின் நிர்வாக நடவடிக்கைகள், இனியும் அவற்றைத் தொடரச் செய்வது உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்கள் கருத்துப்பரிமாற்றம் செய்தனர்.
நீண்ட நேர கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர், சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக மஹல்லாவில் நிலவி வந்த கருத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்பட்டு, அதற்கான முன் முயற்சியாக, கடந்த 13.09.2010 அன்று மஹல்லா முக்கியஸ்தர்களால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இப்பொதுக்குழு அங்கீகரித்தது.
இறுதியாக, மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி S.A.K.மஹ்மூத் நெய்னா,
முத்தவல்லி,
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி,
காயல்பட்டினம். |