தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை இணைப்பு பெறாமல் விடுபட்டுப் போனவர்களை இனங்கண்டு பெயர் பதிவு செய்து தருமாறு, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, காயல்பட்டினம் 08, 09 மற்றும் 12ஆம் வார்டுகளைச் சார்ந்த பயனாளிகளின் பெயர் பதிவு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில் 07.10.2010 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இப்பதிவு முகாமில், விடுபட்ட 516 பேரில், 400 பேர் தமது பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை, நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஐ.ரஃபீக், எஸ்.எம்.அஹ்மத் ஃபரீதா ஆகியோர் செய்திருந்தனர். |