தூக்கி எறியும் அதிகாரம் posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[19 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5403
அன்பு சகோதரர். H .ஹாஜா.. அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி. அருமையாக யோசிக்கின்றார்.
உங்களுக்கு ஒரு சிறு விளக்கமே இந்த பதிவு.
இதுநாள் வரை ஜமாத் மூலமாக கட்சிகள் வேறுபாடு இன்றி நம் பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து வந்து உள்ளோம். இதனால் நம் நாகராட்சியின் செயல்பாடுகள் மிகவும் அருமையாக உள்ளன. அனைத்து வேலைகளும் நேர்மையாக நடைபெறுகின்றன, லஞ்சம் இல்லவே இல்லை, சுகாதாரம் மிகவும் அருமையாக உள்ளன,தண்ணீர் பஞ்சம் கிடையவே கிடையாது. அப்படி தானே.
மமக சுயநலத்தோடு தான் இந்த முடிவை எடுத்து உள்ளது. ஆம்... நம் ஊர் நன்றாக இருக்கணும் என்ற சுயநலம், நம் நகராட்சியில் ஊழல் அற்ற நிர்வாகம் நடக்கணும் என்ற சுயநலம், சுகாதாரமான ஊர், சுத்தமான,ஒழுங்கான குடிநீர் கிடைக்கணும் என்ற சுயநலம்.
ஆமாம்.. மமக தேர்தலில் போட்டி இட்டால் ஊரில் பிரிவினை வருமா?. யார் சொன்னது.
முதலில் குடும்பத்தில் ஒற்றுமையை கொண்டு வாருங்கள். சொந்த மாமா மகளையே பொண்ணு எடுக்க இயலவில்லை. கேட்டால் கொள்கை இடிக்குதாம்...முதலில் இப்படி குடும்பத்தில் இருக்கும் பிரிவினையை சரி செய்தாலே ஊர் நன்றாக இருக்கும்.
நமக்கு தேவை இறைபயம் உள்ள, சமூக சிந்தனை உள்ள, மக்களுக்கு சேவை செய்வதில் அக்கறை உள்ள நல்லவர்கள் தான். இதில் மமக ஒன்றும் குறைந்தது அல்லவே. அவர்களிலும் கருப்பு ஆடுகள் இருந்தால்,அவர்களை தூக்கி எறியும் அதிகாரம் மட்டும் ஜமாத்துக்கு கொடுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross