காயல் நல மன்றங்களின் முன் மாதிரி ! மூத்த நல மன்றம் !! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[25 June 2011] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 5603
காயல் நல மன்றங்களின் மூத்த மன்றமாக திகழும் நீங்கள் எப்பொழுதும் முன்மாதிரி மன்றமாகவே திகளுவீர்கள்... சந்தேகமே இல்லை! உதவி செய்வதிலும் அவசர கால அனுசரணை புரிவதிலும் நீங்கள் சளைத்தவர்கள் அல்ல.... தொடரட்டும் உங்கள் சேவை.. கிட்டட்டும் இறை அருள்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க நல வாழ்த்துக்கள்!!
ஒரு சிறிய ஆலோசனை.. அதாவது அறுவை சிகிச்சை உதவி புரிய முன் வரும் பொழுது நேரடியாகவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மேலாளரோடு தொடர்பு கொண்டு செயல்பட்டால் உரிய சலுகை கட்டணத்தில் நிறைவான மருத்துவ சேவை புரிவார்கள். உதாரணதுக்கு ஒன்று... கண் புரை அறுவை சிகிச்சைக்கு எங்க போனாலும் அதிக பட்சம் ரூபாய் 6000/= வசதி உயர்ந்தவர்களுக்கு மட்டும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப லென்ஸ் பொருத்தி அதிக கட்டணம் பெறுவார்கள். ஆனால் காட்சி என்பது ஒன்று தான்... பொது நல சேவை புரிபவர்களுக்கு என்று தனி சலுகை தருகிறார்கள் வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம் போன்றவர்கள்... அவர்களோடு ஒரு நல உறவு வைத்துக் கொண்டால்.... மேலும் அதிக நபர்களுக்கு உதவி புரியலாமே என்பது தான் என் கருத்து.
இது போன்று தான் எல்லா நல உதவி திட்டங்களுக்கும் பொருந்தும். நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையாக இருக்கட்டும்... நம்மை போன்றவர்கள் தொடர்பு கொண்டால் சலுகை கட்டணத்தில் நிறைவான மருத்துவ சிகிச்சை தருவார்கள். இதை கவனத்தில் கொண்டு செயல் பட்டு மேலும் நிறைய பேருக்கு உதவிகள் புரிந்து நோயற்ற காயல் நகரம் உருவாக்க துணை புரியும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross