சஊதி அரபிய்யா, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவராக சேவையாற்றி விடைபெற்றுள்ள ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ், சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் ஆகியோருக்கு ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்,
எமது காயல் நற்பணி மன்றம் ரியாத் அமைப்பின் 25 வது செயற்குழு கூட்டம் 16.06.2011 வியாழன் பின்னிரவு 08.00 மணியளவில் ஜனாப் ஹாஃபிழ் ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் ஆலோசகர் ஹாஜி கூஸ் அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அமைப்பின் துணைப்பொருளாளர் அல்ஹாஜ் P.S.J.ஜைனுலாப்தீன் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கம் செய்தார்.
உறுப்பினர்களின் நகர் நலன் குறித்த கருத்து பரிமாற்றங்களை தொடர்ந்து பின் வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 01 - ஆக.05இல் பொதுக்குழு:
எம் மன்றின் பொதுக்குழு மற்றும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.08.2011 வெள்ளிக்கிழமை மாலை பத்தாஹ் கிளாச்சிக் ஹாலில் நடத்துவது என்றும், அதில் மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து காயலர்களையும் கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 02 - இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து:
இக்ராஃ கல்வி சங்கத்துக்கு நடப்பு பருவத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும், புதிதாக தேர்வாகி உள்ள மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் எம் மன்றம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. இதுவரை சிறப்பாக பணியாற்றிய ஹாஜி பாளையம் ஹசன் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறது.
தீர்மானம் 03 - விடைபெற்ற துணைத்தலைவருக்கு நன்றியும், வாழ்த்தும்:
எம் மன்றின் துணைத்தலைவர் ஹாஃபிழ் N.T. சதகத்துல்லாஹ் அவர்கள் ரியாதிலிருந்து விடைபெற்று தாய்த்திருநாட்டில் மூன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி ஏற்று சிறப்பான நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருவதை எம் மன்றம் மனதார வாழ்த்தி வரவேற்கிறது.
இதுநாள் வரை, எம்முடன் இணைந்து ஆக்கபூர்வமான பணிகளை செவ்வனே செய்து வந்துள்ளதை நன்றியுடன் நினைத்து பெருமகிழ்வு கொள்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் தாம் மேற்கொண்டுள்ள பணிகள் சிறப்பாக அமைய அருள்புரிவானாக என்று பிராத்திக்கின்றது.
தீர்மானம் 04 - இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு வாழ்த்து:
காயல் மாநகரில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு சிறப்பாக நடந்தேற எம் மன்றம் வாழ்த்துகிறது.
தீர்மானம் 05 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் ஏழை மக்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களை பரிவுடன் பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று தாரளமாக உதவிய அன்பு கோதரர்களுக்கும் மன்றம் நன்றிகளை தெரிவிக்கிறது.
(அ) பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், பாட குறிப்பேடுகள் வகைக்கு ரூபாய் 20,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஆ) ஆதரவற்ற சகோதரி ஒருவருக்கு தண்ணீர் தேவைக்கு கிணறு எடுக்கும் வகைக்கு ரூபாய் 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(இ) சிறுநீரக பிரச்சினை, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவருக்கு ஆறு மாதத்துக்கான மருத்துவ செலவு ரூபாய் 10,000/- எம்மன்றம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.
(ஈ) இரத்தம் உறையாமை நோயினால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கும் ஒரு சகோதரிக்கு தொடர் சிகிச்சை வகைக்காக ஒவ்வொறு வருடமும் ஒரு மாதத்திற்கான மருத்துவ செலவு ரூபாய் 12,500/-, எம்மன்றம் பொறுப்பெடுத்துக்கொள்கிறது.
(உ) சர்க்கரை நோயினால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கும் ஒரு சகோதருக்கு மருத்துவ செலவின் ஒரு பகுதியாக ரூபாய் 10,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஊ) கண்பார்வை கோளாறினால் அவதிக்கு உள்ளாகி இருக்கும் ஆதரவற்ற வயதான மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை வகைக்கு ரூபாய் 10,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(எ) பித்தப்பை கல் நீக்க அறுவை சிகிச்சை வகைக்கு, சகோதரர் ஒருவருக்கு வகைக்கு ரூபாய் 7,500/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்ட நிறைவு:
நன்றியுரைக்கு பின் இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூற இறையருளால் இனிதாய் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு ரியாத் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.முஹம்மத் லெப்பை,
துணைச் செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |