உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சி இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இவ்விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில், இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சி,
நாளை (25.06.2011) காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள, “மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஆகிய இவ்வரிய நிகழ்ச்சிகள் இறையருளால் முழு வெற்றி பெற்றிடவும், அதன்மூலம் நம் நகரின் மாணவ சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைத்திடவும், அதன் பயனாக வரும் ஆண்டில் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றிடவும், நகரின் அனைத்து மாணவ-மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்திடவும் எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில் மனதார வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வளவு அருமையான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாக்கியம் இந்த ஆண்டு எங்களுக்குக் கிடைக்கவில்லையென்றாலும், எங்கள் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளருமான ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் இவ்விழாவில் கலந்துகொள்வதை நாங்கள் கலந்துகொண்டதாகவே கருதுகிறோம்.
இவ்வினிய விழா நனிசிறப்புடன் நடந்தேறவும், அதன் முழுப்பலனும் நம் நகரின் மாணவ கண்மணிகளுக்கு நிறைவாகக் கிடைத்திடவும் எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |