காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பில், “மனதோடு போராடு” உளத்தூய்மை நிகழ்ச்சி, “குர்ஆனாக வாழ்ந்திடு” என்ற துணைத்தலைப்பின் கீழ் இம்மாதம் 25ஆம் தேதி, காயல்பட்டினம் காயிதேமில்லத் நகர் அன்னை கதீஜா மத்ரஸாவில் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மடமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி கிடந்த மக்களை உலகமே போற்றக்குடிய அளவுக்கு இந்த குர்ஆன் அவர்களை எல்லாவகையிலும் உயரச் செய்து, வாழ வழி காட்டியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்வு குர்ஆனாக இருந்தது என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தது நாம் அறிந்ததே! நம்மில் பெரும்பாலனவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் விட்டு விலகியதால் மீண்டும் மடமையை நோக்கியும், ஒழுக்கக் கேட்டை நோக்கியும் சென்று கொண்டுருக்கிறது நம் சமூகம்.
இத்தலைமுறை நேர்வழியில் சென்றிட, மீண்டும் ஈமானை புதுபித்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள உளத்தூய்மை நிகழ்ச்சியே “மனதோடு போராடு”.
அதனுடைய 4ஆம் பாகமாக, “குர்ஆனாக வாழ்ந்திடு” என்ற தலைப்பில் மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ அவர்கள் (அழைப்பாளா; ஐ.ஜி.சி. குவைத்) உரையாற்றுகிறார்.
இன்ஷாஅல்லாஹ், 25.06.2011 சனிக்கிழமையன்று மாலை 04.30 மணி முதல் 06.30 மணி வரை, காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸாவில் நடைபெறவுள்ள இந்த உளத்தூய்மை நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை, சகோதரர் அப்துல் பாசித் (கைபேசி எண்: 80560 17038), சகோதரர் அப்துல் காதர் (கைபேசி எண்: 96775 55548) ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |