உலகளவில், இணையதளங்கள் வாயிலாக கண நேரத்தில் தேவைப்படும் தகவல்களை தேடித் தரும் "கூகுள்' சேவை, இனி தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத், பெங்காலி மொழிகளிலும் கிடைக்கும்.
இதுகுறித்து, "கூகுள்' விஞ்ஞானி ஆசிஷ் வேணுகோபால் "கூகுள்' "ப்ளாக்'கில் தெரிவித்துள்ள தகவலில், "கூகுள்' சேவையை தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத், பெங்காலி மொழிகளில் வழங்குவதற்கான, மொழிமாற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்தியா, வங்கதேச நாடுகளில் மட்டும், இந்த மொழிகளை 50 கோடி மக்கள் பேசுகின்றனர். "கடந்த, 2009ஆம் ஆண்டிலிருந்து "கூகுள்' சேவை, 11 மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மொழி மாற்றங்களுடன் சேர்த்து எண்ணிக்கை, 63 ஆக அதிகரித்துள்ளது. "கூகுள்' சேவையில் கிடைக்கும் இந்த மொழிகளில், தகவல்கள் விட்டுப் போயிருந்தால் அல்லது தவறு நேர்ந்திருந்தால் தகவல் கொடுக்கலாம்' என, தெரிவித்துள்ளார்.
நன்றி:
தினமலர் (22.06.2011) |