உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சி இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்படுகிறது.
காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயத்தை மாநில அளவில் சாதனை செய்திட சிந்திக்கத் தூண்டும் நோக்குடன், இன்று நடைபெறும் விழாவையும் சேர்த்து இவ்விழா தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் இவ்விழாவில், இவ்வாண்டு ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஓசூரைச் சார்ந்த மாணவி கே.ரேகா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், உடன்குடியைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நஸீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாநில சாதனை மாணவியைப் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்குகிறார்.
காயல்பட்டினம் நகரிலிருந்து மாநில, மாவட்ட, நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் இவ்விழாவில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
விழா ஏற்பாடுகளை, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஒருங்கிணைப்பில், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.மெஹர் அலீ, செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ, அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத், ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலர் எஸ்.எச்.அப்துல் காதிர் ஆகியோரும், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பஹ்ரைன் காயல் நல மன்ற (பக்வா) பொருளாளர் வேனா ஜாஹிர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், குவைத் காயல் நல மன்ற நிர்வாகி செய்யித் அபூதாஹிர், கத்தர் காயல் நல மன்றத தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இலங்கை காயல் நல மன்ற அங்கத்தினர், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) நிர்வாகி எஸ்.எம்.எஸ்.ஸாலிஹ் உள்ளிட்ட அனைத்துலக காயல் நல மன்ற அங்கத்தினர் இவ்விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கலந்துகொண்டனர். |