உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சி இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இவ்விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் அப்துர்ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில், இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சி,
நாளை (25.06.2011) காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள, “மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் இறையருளால் வெற்றிபெறவும், நமதூர் மாணவ சமுதாயத்திற்கு முழுப்பயனளிக்கவும் எமது பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் மனதார வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இந்த நல்ல நிகழ்ச்சியில் எங்கள் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் கலந்துகொள்ளவிருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இவ்வினிய விழா நனிசிறப்புடன் நடந்தேறவும், அதன் முழுப்பலனும் நம் நகரின் மாணவ கண்மணிகளுக்கு நிறைவாகக் கிடைத்திடவும் எமது பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |