காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது.
இறுதிநாளான இன்று நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் ஐ.ஐ.எம். இணையதளத்தில் (www.iimkayal.org) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
இன்றைய காலை நிகழ்ச்சியில் - 10:00 மணி முதல் 12:30 மணி வரை சித்தீக்கியா பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரைகள் இடம் பெறுகிறது.
உலகளாவிய இஸ்லாமிய பெண்கள் தலைப்பில் என். ஆயிஷா பெனாசிர் (செங்கோட்டை) பேசுகிறார். கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் எம். ஜைனம்பு நாச்சி (காயல்பட்டினம்) அரபி உரை நிகழ்த்துகிறார். அதன் மொழி பெயர்ப்பை பி. ஹுசைனிய்யா வழங்குகிறார்.
மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை பட்டம் பெரும் மாணவியருக்கான அறிவுரைகளை மௌலவி அப்துல் மஜீத் மஹ்லரி (முதல்வர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி) வழங்க உள்ளார்.
மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை பட்டமளிப்பு பேருரையினை மௌலவி ஜமாலுதீன் பாசி (அழைப்பாளர், தாவா சென்டர், குவைத்) வழங்குகிறார்.
தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு.
|