Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:43:46 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6585
#KOTW6585
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 28, 2011
தமிழக அமைச்சர்கள் சிலரின் இலாகாக்கள் மாற்றம்! புது மந்திரியாக முகமது ஜான் நியமனம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3381 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மறைந்த மரியம் பிச்சைக்கு பதிலாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை கடந்த மே 16ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் முதல்வர் நடத்த உள்ளார். இதுதவிர, பட்ஜெட் தயாரிப்பு பணியும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே, அமைச்சரவையில் மற்றொரு இஸ்லாமியருக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. இதன்படியே, புதிய அமைச்சராக, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, முகமது ஜானை அமைச்சராக நியமித்து, கவர்னர் பர்னாலா நேற்று உத்தரவிட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்க உள்ளது.

புதிய அமைச்சர் நியமனத்துடன், ஆறு அமைச்சர்களது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக பொறுப்பேற்கும் முகமது ஜான் வசம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இலாகாவை கவனித்து வந்த சின்னையா, இனி சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக செயல்படுவார்.

அமைச்சர் சண்முகவேலுவிடம் இருந்து தொழில் துறை பறிக்கப்பட்டு, சிறு தொழில் உட்பட ஊரக தொழில் துறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை வழங்கப்பட்டுள்ளது.

சண்முகவேலு வசம் இருந்த தொழில், இரும்பு கட்டுப்பாடு, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கத் துறையை வைத்திருந்த எஸ்.பி.வேலுமணி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கருப்பசாமி வசம் இருந்த கால்நடைத் துறை, அமைச்சர் சிவபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிவபதி வசம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கருப்பசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தன.

நன்றி:
தினமலர் (28.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பரவா இல்லையே !!!!
posted by சாளை நவாஸ் (singapore) [28 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5637

அம்மா பரவா இல்லையே!!!! சொல்லி வையுங்க கும்பிடு போடா வேண்டாம், தொபடீர்னு விழ வேண்டாம், 32 பல்லையும் காட்ட வேண்டாம். மிலிடரி சலுட்டே போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. முஸ்லிமுக்கு அமைச்சர்
posted by Thymiah (Chennai) [28 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5647

தமிழக அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி வழங்கபட்டிருப்பதை வரவேற்க்கிறோம். கருணாநிதியின் காலில் விழாத அமைச்சர்கள் உண்டா? தேவையில்லாத விமர்சனத்தை தவிர்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எதற்கெடுத்தாலும் ஒரு விமர்சனம் பண்ண வேணுமா..
posted by Cnash (Makkah ) [29 June 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5657

எதற்கெடுத்தாலும் ஒரு விமர்சனம் பண்ண வேணுமா.. அம்மா முஸ்லிம் கு இடம் கொடுக்கிறாரா பார்ப்போம் என்று இதுக்கு முன்னே கருத்து!!! இப்போ நவாஸ் கு பொழுது போக இல்லை போலே ஆரம்பிச்சி வச்சிருக்கன்!!! ஆமா நவாஸ்!! எதுக்கு முன்னே அய்யா கிட்டே அமைச்சரா இருந்தவங்க எல்லாம் சுய மரியாதையோடும், இஸ்லாமிய நெறியை பேனுபவராவும்தான் இருந்தாரோ!!!

எந்த கழக ஆட்சியா இருந்தாலும் சரி அவர் முஸ்லிமாக இருந்தாலும் அவர் இருக்கும் கட்சிக்குதான் விசுவாசமா இருப்பார்.. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்!! எதோ இஸ்லாமியருக்கு இடம் அவ்வளவுதான்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. vaaltthukkal
posted by vsm ali (kangxi , Jiangmen, China) [29 June 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5659

வாழ்த்துக்கள் ஜனாப். முஹம்மது ஜான் அவர்களே!

இவரோடு சில காலங்கள் நெருங்கி பழகி இருக்கிறேன். பலனை எதிபாராமல் பிறருக்கு உதவுபவர். நேர்மையானவர். இறை பக்தி அதிகம் உள்ளவர். இவரால் நம் சமுதாயம் பலன் பெரும் என்று நம்பலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [29 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5664

இன்று புதிதாக சிறுபான்மை நல அமைசாராக பதவியேற்ற ஜனாப்.முகம்மது ஜான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நமது சமுதாயதிற்கு நல்ல பல நன்மைகளை செய்யயும், மேலும் நமது இடஒதிகீடை அதிக படுத்தி தர முயர்சிகளை செய்யஉம் இந்த நேரத்தில் அவரிடம் கேட்டு கொள்வோம். அவரின் பணிகள் நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்!
posted by kavimagan (dubai) [29 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5665

மாண்புமிகு முஹம்மத் ஜான் அவர்களே! உங்களது எளிமை,நேர்மை,இறைபக்தி குறித்து தங்களை அறிந்த நண்பரிடமிருந்து செவியுற்றேன். கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி, அ.தி.மு.க. முஸ்லிம்களுக்கு ஆதரவான இயக்கம் அல்ல என்று கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாயைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்த இயக்கத்தில் இருந்தபோதும்,தமது சமூகத்தை அரவணைத்து சென்றதால் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாயம்,இன்று பலம்வாய்ந்த தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. நாமும் ஒன்றுபடுவோம்.நல்லவர்க்கு வாய்ப்பளிப்போம். இனிப்பு வார்த்தைகளால் நம்மை ஏமாற்றியவர்களை, இனி எப்போதும் தலை தூக்க விடாமல் தடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. புதிய மணவாட்டி......
posted by zubair (riyadh) [29 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5666

தமிழக முதல்வருக்கு தற்காலிக பாராட்டுகள், புதிய நம் மந்திரி ஜனாப் முகமது ஜான் அவர்களுக்கு நிரந்தர வாழ்த்துக்கள். சுய புத்தியில் நல்லதும், சொல் புத்தியில் நல்லதையும் கேக்காத நம் முதல்வர் இப்பொழுது நடப்பதை பார்த்தால்..... எனக்கு மட்டும் அல்ல எல்லாவருக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. என்றாலும்.... ஒரு பழமொழி சொல்வார்கள் நாய் வாலை நானூறு வருடம் ஊது குழலில் இட்டு வைத்தாலும் நிமிராது..... என்று. பொறுத்திருந்து அம்மாக்கு நிரந்தர வாழ்த்தை அடுத்த தேர்தலின் பொது வாக்குகள் மூலம் தெரிவிப்போம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கண்ணுக்கு மை அழகு..... கவிதைக்கு பொய் அழகு....
posted by zubair (riyadh) [29 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5673

மாண்புமிகு முஹம்மத் ஜான் அவர்களே! உங்களது எளிமை,நேர்மை,இறைபக்தி குறித்து தங்களை அறிந்த நண்பரிடமிருந்து செவியுற்றேன். கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி தங்களின் பெயரையும், நம் சமுதாயத்தின் பெயரையும் காப்பாற்றுவீர்கள் என்று நினைக்கிறேன். தாங்களின் தலைமை முஸ்லிம் (சிறுபான்மையினருக்கு) எதிரானது என்பது இது நாள் வரை உள்ள அப்பட்டமான உண்மை. இனியாவது தாங்களின் தலைமை தவறை உணர்ந்து செயல் படும் என்று நம்புகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கவிதைக்கு பொய்யழகு! கவிஞனுக்கு மெய்யழகு!
posted by kavimagan (dubai) [30 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5676

நண்பர் ஜுபைர் அவர்களின் கருத்து ரசிக்க வைத்தது. இதைப் போன்ற ஆரோக்கியமான கருத்து மோதல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன். இதே விஷயத்தை, இன்னுமொரு விவாத களத்தில் விரைவில் விவாதிப்போம். இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved