காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
இருபத்து மூன்றாம் நாளான நேற்று, (26.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தூத்துக்குடி ப்ரையண்ட் நகர் ஜும்ஆ ப்ள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் ஆகியோர் வழங்கினர்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ மற்றும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ செய்யித் முஹம்மத் புகாரீ மன்பஈ ஆகியோர் வழங்குகின்றனர்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|