கத்தர் காயல் நல மன்றம் நடத்திய, நகர பள்ளிகளுக்கிடையிலான இரண்டாமாண்டு வினாடி-வினா போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது.
கத்தர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொள்ளும் வினாடி-வினா போட்டி சென்ற ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாமாண்டு வினாடி-வினா போட்டி 25.06.2011 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. துவக்கமாக தேர்வுச் சுற்று (Preliminary Round) நடைபெற்றது.
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 43 அணிகள்,
சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 15 அணிகள்,
எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 51 அணிகள்,
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 19 அணிகள்,
எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் இருந்து 26 அணிகள்,
சுபைதா மேல்நிலைப்பள்ளியில் இருந்து 19 அணிகள் என மொத்தம் காயல்பட்டினத்தில் உள்ள ஏழு பள்ளிக்கூடங்களில் இருந்து 195 அணிகள் பங்கேற்றன. ஒவ்வோர் அணியிலும் இரு மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியை, புகழ்பெற்ற செய்தி நிறுவனமான IFRAவின் தெற்காசிய நிர்வாக இயக்குனர் Quiz Master கே.இசட்.மக்தூம் முஹம்மத் நடத்தினார். தேர்வுச் சுற்றில் (Preliminary Round) 26 கேள்விகள் கேட்கப்பட்டன. அதனடிப்படையில் இறுதிபோட்டிக்கு 8 அணிகள் தேர்வாயின.
இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட 8 அணிகள் விபரம் வருமாறு:-
1) சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
(a) எம்.ஏ. இப்ராஹீம் சில்மியா
(b) எம்.ஏ.கே. உம்மு சல்மா ரைஹானா
2) சுபைதா மேல்நிலைப்பள்ளி
(a) கே.எம்.ஏ.எஸ். செய்யத் முஹம்மது பாத்திமா
(b) என்.எம்.யு. முத்து பீவி பாத்திமா
3) எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) எம்.ஏ.கே. ஹாஜா தௌபீக்
(b) எம்.ஹெச். முஹம்மது அபூபக்கர்
4) எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) எஸ்.எம்.எஸ். மஹ்மூத் சுல்தான்
(b) எஸ்.ஏ.என். அப்துல் காதர் நௌபல்
5) எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) ஆர்.எஸ்.சதகத்துல்லாஹ்
(b) எம்.ஏ.எஸ். ஹாஜா நவாஸ்
6) எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) ஜே.பஹிம் அஹ்மத்
(b) என்.முஹம்மது அல்தாப் ஹுசைன்
7) எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) கே.ஐ. ஹாரூன் மீரான்
(b) என்.எம். செய்யத் மீரான்
8) சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி
(a) எம்.டி முஹம்மது அலி சாஹிப்
(b) கே.அஹ்மத் தாஹிர்
மாலை 05:30 மணியளவில் துவங்கிய இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதலிடத்தில - இரு அணிகள் ஒரே புள்ளியிலும், இரண்டாம் இடத்தில மூன்று அணிகள் ஒரே புள்ளியிலும் இருந்தன. Tie - Breaker முறையில் கீழ்க்காணும் அணிகள் வெற்றி பெற்றன
முதலிடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) எஸ்.எம்.எஸ். மஹ்மூத் சுல்தான்
(b) எஸ்.ஏ.என். அப்துல் காதர் நௌபல்
இரண்டாமிடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) ஜே.பஹிம் அஹ்மத்
(b) என்.முஹம்மது அல்தாப் ஹுசைன்
மூன்றாம் இடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
(a) கே.ஐ.ஹாரூன் மீரான்
(b) என்.எம். செய்யத் மீரான்
முதல் இடம் பெற்ற அணியின் பள்ளிக்கு கோப்பையும், மாணவர்களுக்கு 5,000 ரூபாய் பணப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இரண்டாம் இடம் பெற்ற அணி மாணவர்களுக்கு 3,000 பணப்பரிசும், சான்றிதழ்களும், மூன்றாம் இடம் பெற்ற அணி மாணவர்களுக்கு 2,000 பணப்பரிசும், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டிக்கு தேர்வான அனைத்து அணியினருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
தேர்வுப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளுக்கும் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் பள்ளிக்கூடங்கள் வாயிலாக வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக லேண்ட்மார்க் ராவன்னா அபுல் ஹசன் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். அவருக்கும், வினாடி வினா போட்டியினை நடத்திய கே.இசட்.மக்தூம் முஹம்மதுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரும் பார்வையாளர்களாக பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இக்ராஃ கல்வி சங்கம் மற்றும் தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்பினர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் உறுதுணை புரிந்தனர்.
துவக்க ஆண்டு போட்டி காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது. இந்தியாவின் தலைசிறந்த வினாடி-வினா நடத்துனர் கிரி பாலசுப்ரமணியம் நடத்திய அப்போட்டியிலும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினர் கோப்பையைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. |