காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், “மனதோடு போராடு!” நிகழ்ச்சியின் நான்காம் பாகம் “குர்ஆனாக வாழ்ந்திடு!” எனும் தலைப்பில் உளத்தூய்மை நிகழ்ச்சி 25.06.2011 அன்று மாலை 04.30 மணி முதுல் 06.30 மணி வரை காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸாவில் நடைபெற்றது.
துவக்கமாக “குர்ஆன்தான் வாழ்க்கையா?” எனும் தலைப்பில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
பின்னர், குவைத் ஐ.ஜி.சி. அழைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ நிகழ்ச்சியை உரையாற்றினார்.
திருமறை குர்ஆனை அழகிய முறையில் ஓத...
பொருள் விளங்கி ஓத...
இயன்றளவுக்கு அதன் வசனங்களை மனனம் செய்திட...
தான் கற்றதை பிறருக்கும் கற்றுக்கொடுக்க...
முஸ்லிமல்லாத மக்களுக்கும் குர்ஆனின் போதனைகளை எடுத்துரைக்க...
இந்நிகழ்ச்சியில் பயிற்சியளிக்கப்பட்டதோடு, இவற்றைக் கடைப்பிடித்தாலே ஒருவர் குர்ஆனாக வாழ்வார் எனும் கருத்தை முன்வைத்து மவ்லவீ ஜமாலுத்தீன் ஃபாஸீ உரை அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஐந்தாவது நிகழ்ச்சி, “ரமழானே வருக!” எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது. |