காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லியும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலரும், எஸ்.ஜே.எம். மெடிக்கல்ஸ் அதிபருமான ஹாஜி பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி இன்று மாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவரது உடல் நிலை நேற்று கவலைக்கிடமானது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை (28.06.2011) காலை 09.00 மணிக்கு, அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1. சபூர்... posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[27 June 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 5617
இன்னாலில்லாஹி.........யாஅல்லாஹ் மர்ஹும் அவர்களின் பாவபிலைகள் பொறுத்து அன்னாருக்கு சுவனபதி தந்தருள்வாயாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு என் சலாதினாய் கூறி கொல்கிறேன் அஸ்லாம்அளைக்கும்.
3. ஒரு நல்ல மனிதரை நம் ஊர் இழந்து உள்ளது. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபர் )[27 June 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5619
இன்னாஹ் லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊண்
ஒரு நல்ல மனிதரை நம் ஊர் இழந்து உள்ளது.
சிரித்த முகம், யார் எத்தனை மணிக்கு இரவில் கதவை தட்டி மருந்து வேண்டும் என்றாலும் முகம் சுழிக்காமல் கடையை திறந்து எடுத்துக்கொடுக்கும் பண்பு, அஹ்மத் நெய்னார் பள்ளி உடைய வளர்ச்சிக்கு அவர்கள் பட்ட சிரமங்கள், அந்த பள்ளியில் ஒரு ஒழுங்கை நிலை நாட்டிய சேவை இதற்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி உண்டு.
வல்ல ரஹ்மான் அவர்களின் பாவங்களை மன்னித்து, சுவர்ணபதியை அருள்வானாக..
துயரத்தில் வாடும் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஜாமாத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.
4. இன்ன லில்லாஹி வா இன்னா இலஹி ராஜியூன் posted byAbdul Razzaq Lukman (Dubai)[27 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5621
ஷாபி மாமா அவர்கள் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதி கொடுக்க துஆ செய்கிறேன்.
அஹ்மத் நைனார் பள்ளியின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அல்லாஹ் அவர்களின் சேவையை ஏற்று நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்க்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக.ஆமீன்.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
6. Innalillahi Wa Inna ilaihi Rajioon posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[27 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5623
Condolence
My deepest condolence to the deceased family members.ALLAH will accept things and HE will blessings to enter Jinnathul Firdouse.My humble request to their family members to be patients.
He dedicated most of his time for the welfare of Ahamed Nainer pallai. Really his death is great loss for us.
8. السلام عليكم و رحمت الله و بركاته posted byAbdulkader Thaikasahib MSS (Riyadh, KSA)[28 June 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5626
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம்
السلام عليكم و رحمت الله و بركاته
M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு
9. இனிமையானவர் posted byபாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia)[28 June 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5627
ஷாஃபி காக்கா, பழக மிக இனிமையானவர். அவர்களின் மரணச் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. வல்ல அல்லாஹ் அவர்களின் நற்செயல்களை ஏற்று, பாவங்களை மன்னித்து கப்ருடைய வாழ்கையை நிம்மதியாக்கி, சுவர்கத்தில் மேலான பதவியை வழங்குவானாக! அவர்களின் குடும்பத்தாருக்கு மன சாந்தியை அளிப்பானாக! ஆமீன்
அல்ஹாஜ் ஸாபி அவர்களின் இழப்பு சமுதாயத்திற்கு மிகப்பெரும் நஷ்டமாகும். அன்னாரின் குடும்பத்தார்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்கள், குற்றங்கள், குறைகள் இவைகளை மன்னித்து அன்னாரின் கப்ரை சுவனப் பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்!
குறிப்பாக ஒற்றுமையின் உருவமாய்.... புன்னகை தவழும் மனிதராய்.... தம்பி ஜியாவுதீன் சொன்னது போல எந்த நேரமானாலும் சடையாது தன் மெடிக்கல் கடையை திறந்து உயிர் காக்கும் மருந்துகள் கொடுத்து சிறப்பான சேவையை நம் நகர மக்களுக்காக தந்தவர்...
இன்னும் திரை மறைவில் பற்பல நன்மைகள் ஆற்றிய ஒரு மாமனிதரை நம் தாயகம் இழந்து நிற்கிறது என்று சொன்னால் மிகையாகாது....
குறிப்பாக எங்கள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு நல்ல பல சேவைகள் செய்வதற்கு ஊக்கம் தந்த கிடைப்பதற்கரிய சிறந்த மனிதரை பிரிவது என்பது தாங்க முடியாத வேதனையாக வலிக்கிறது.... அல்லாஹ்வின் நாட்டம்... அவர்கள் நம்மை முந்தி விட்டார்கள்...
அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்.... ஜமாத்தார் அனைவர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்ல என்றே தெரிய வில்லை... அவர்கள் அனைவர் மனத்திலும் வல்ல ரஹ்மான் , சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொண்டு நிரப்புவானாகவும்!
மர்ஹூம் மாமா அவர்களின் நற்கிரியைகளை மிகவும் கருணையோடும்... இரக்கத்தோடும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று, அவர்களின் கப்ரை சுவனத்து பூங்காவாக்கி, நாளை மறுமை நாளில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மேலான ஷபாத்தோடு, ஜன்னத்துல் பிர்தவ்ஸில் அஃ லா வெனும் உயரிய சுவனபதியை அடைய இந்த நேரத்தில் கண்ணீர் மல்க இறைஞ்சுகிறோம்... ஆமீன்!
கனத்த இதயத்துடன்,
அன்பு மாறாத மருமக்கள்,
K.V.A.T.கபீர்
K.VA.T. ஹபீப்
K.V.M.A.C. மொஹ்தூம் மற்றும் K.VA.T. குடும்பத்தினர்
காயல்பட்டினம் & கத்தார்
14. பொது சேவையில் தன்னை அர்பணித்தவர் posted bySTAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM)[28 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5632
சாபி காக்கா அவர்களின் வபாத் செய்தி கேட்டு அதர்ச்சி அடைந்தேன் பொது சேவையில் தன்னை அர்பணித்தவர். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்... அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்க்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக.... ஆமீன்...
15. வருந்துகிறோம் posted byM.E.L.NUSKI (Riyadh -KSA)[28 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5634
சிறந்த பண்பாளர் .சீரிய செயல் வீரர் எடுத்த பணியை சிறப்பாக முடிப்பவர் ஹாஜி ஷாபி காக்கா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் யாவரும் சபூர் செய்து கொள்ளுவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி மேலான சுவன பதியில் நுழைய செய்வானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
16. உயர் சுவனத்தை அளித்தருள்வானாக posted byLebbai Zatni (Riyadh)[28 June 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5635
அஸ்ஸலாமு அலைக்கும்,
பள்ளி முத்தவல்லி ஷாஃபி காக்கா மரணம் செய்தி கேட்டு கவலை அடைந்தோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹும் அவர்களின் பாவப்பிழைகளை மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை அளித்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
சாபி காக்கா அவர்களின் வபாத் செய்தி கேட்டு அதர்ச்சி அடைந்தேன். அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையை வழங்குவானாக.... ஆமீன்...
வல்ல அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து சுவனபதியை வழங்குவானாக, ஆமின் மேலும் அவர்களது குடும்பத்தாருக்கு சபூரை கொடுப்பானாக. ஆமீன்
L .T .அஹ்மத் முஹ்யித்தீன்
(சதுக்கை தெரு, காயல் பட்டணம்,
அஹ்மத் நைனார் பள்ளி ஜமாஅத் வாசி)
குவைத்
19. பழகுதற்கினியவர்! posted bySK Salih (Kayalpatnam)[28 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5641
மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபி மாமா அவர்கள் பழகுதற்கினியவர்... பாசத்திற்குரியவர்... எச்சூழலிலும் இன்முகம் காட்டுபவர்...
பொதுவாழ்வில் அவர் சந்தித்த பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளையும் கூட இதமாகக் கைக்கொண்டவர்... ஒற்றுமைப் பாதையில் அஹ்மத் நெய்னார் பள்ளி ஜமாஅத்தை தனது தன்னிகரற்ற தலைமையைக் கொண்டு வழிநடத்தியவர்...
பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக முன்னிறுத்திக் கொண்டவர்...
சென்ற ஆண்டு, ரமழான் இஃப்தார் நிகழ்வுக்கு செய்தி சேகரிப்பதற்காக அஹ்மத் நெய்னார் ப்ளளிக்கு நான் சென்ற நேரத்தில், வழமைக்கு மாற்றமாக அவரைக் காணவில்லை. விசாரித்தபோது, பள்ளியின் பின்புற (மேற்குப்பகுதி) வளாகத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர் மஹல்லாவாசிகள். அங்கு சென்று பார்த்தபோது, காலில் தனக்கேற்பட்ட கடும் அவதி காரணமாக முழு காலையும் மறைக்கும் வகையில் கட்டு போடப்பட்டு, நாற்காலி மீது கால் வைத்தவாறு அமர்ந்திருந்தார்கள்.
“இந்நிலையிலும் பள்ளிக்கு வரத்தான் வேண்டுமா மாமா...?” என்று நான் கேட்க, “நம் பணியை நாம்தானே செய்ய வேண்டும்... எனக்கே முடியாது என்று தோன்றினால் வீட்டில் இருப்பேன்... இது என்ன, காலை கொஞ்....சம் நீட்டி வச்சிக்கிட்டா சரியாப் போகும்...” என்றார்கள்.
அன்னாரது மண்ணறையை அல்லாஹ் சுவனப் பூங்காவாக்கி, அவர்களது மறுமை வாழ்வை உயர்சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் ஆக்கி வைப்பானாக... நம்மையும் அவர்களுடன் சுவனத்தில் சேர்த்தருள்வானாக...
தனிப்பட்ட முறையில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்...
அவர்களது இருப்பை நன்மையாக்கித் தந்த அல்லாஹ், இழப்பையும் நன்மையாக்கித் தந்தருள்வானாக, ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார்-உறவினர், அஹ்மத் நெயனார் பள்ளி ஜமாஅத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
மரியாதைக்குரிய ஷாபி காக்காவின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினர் அனைவர்கலுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹ்).
அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் செய்த நல்ல சேவைகள் நம்மை விட்டும் பிரியாது.வல்ல நாயன் அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனத்தில் நல்ல இடம் கொடுப்பானாக .ஆமீன் ,ஆமீன், யா ராப்பல் ஆலமீன்
24. காயல் மற்றும் அஹ்மத் நைனார் பள்ளிக்கு பெரும் இழப்பு posted byMiskeen Sahib (Bangkok)[28 June 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 5651
காயல் மாநகருக்கு ஒரு பெரிய இழப்பு. குறிப்பாக அஹ்மத் நைனார் பள்ளிக்கு. அல்லாஹ் அவர்களது சேவையை ஏற்று கொண்டு அதற்கு பகரமாக அவனது ரஹ்மத் மற்றும் பாவ மன்னிப்பை அளித்து மேலான சுவன பதியை வழங்கிடுவானாக ஆமீன். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்ல அழகிய பொறுமையை வழங்கிடுவானாக
28. இன்னா லில்லாஹி....... posted byShameemul Islam SKS (Chennai)[01 July 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 5692
ஷாஃபி காக்கா அவர்கள் மரணம் குறித்த செய்தியை இன்றுதான் தெரிந்து கொண்டேன். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காயல்பட்டணத்திற்கு சில லேன்ட்மார்குகளும் சில ஐகன்களும் (ICONS) உண்டு. ஷாஃபி காக்கா அவர்கள் அப்படி ஒரு ஐகன்-ஆக ஊரில் திகழ்ந்தவர்கள். சமூகப்பணிகளில் ஆர்வம் காட்டியவர்கள்.
என் பள்ளிக்கூட நண்பன் சகோதரர் முஜீபின் தந்தை.
அவர்கள் பிரிவு குடும்பத்திற்கும் குறிப்பாக அவர்கள் சார்ந்த அஹ்மது நைனார் பள்ளி ஜமாஅத்தார்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்தருளி மண்ணறை வாழ்வை மேலானதாக்கி மறுமையில் மகத்தான வெற்றியை தந்தருள்வானாக.
அவர்கள் பிரிவை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அதைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை கொடுப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross