காயல்பட்டினம் வாவு வஜீஹாவனிதையர் கல்லூரியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி, 22.06.2011 அன்று நடைபெற்றது. இதுகுறித்து அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது வாவு வஜீஹாவனிதையர் கல்லூரியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி, 22.06.2011 அன்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், இணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோரின் ஆசியுடன் முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பும், அறிவுரை மற்றும் ஆற்றுப்படுத்தல் கூட்டமும் நடைபெற்றது.
கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியை ஷோலா ஃபர்னாண்டோ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி சிறப்புரையாற்றினார்.
பின்னர், கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துணைத்தலைவர் ரஹ்மத் ஆமினா பேகம், பேராசிரியர் ரேவதி, உடற்கல்வி தலைவர் ஸ்வீட்டி ஜெயமேரி, நூலகர் மும்தாஜ் பேகம், தமிழ்த்துறைத் தலைவர் இரா. அருணா ஜோதி, வணிகவியல் துறை பேராசிரியர்கள் பயஸ் ஜஹான், மாலினி, ஆங்கிலத்துறை பேராசிரியையர் துணைசெல்வி, இசையகலா, கிருஷ்ணவேணி, கணிப்பொறியியல் துறை பேராசிரியை செல்வலெட்சுமி ஆகியோர், கல்லூரியின் மாணவப் பணிகள் குறித்து உரையாற்றினர். கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
வணிகவியல் துறைத்தலைவி சுபா நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |