இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு சிம் கார்டு வழங்கப்படும் என ஜித்தாவில் உள்ள இந்திய தூதர் பாயிஸ் அஹ்மத் கித்வாய் தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பலரிடம் அவசர காலங்களில் பயன்படுத்தவேண்டிய தொலைபேசி எண்கள் பொதுவாக இருப்பதில்லை. இதனை கடந்த ஆண்டு அனுபவங்கள் மூலம் அறிந்துக்கொண்டோம். அதன் பின்னணியில் இந்திய ஹஜ் பயணியருக்கு - மிகக்குறைந்த கட்டணத்தில் சிம் கார்ட், அவர்கள் விமான நிலையத்தில் இறங்கும்போதே வழங்கப்படும். அந்த சிம் கார்டில், தூதரக எண்கள் உட்பட முக்கிய எண்கள் முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும். மொத்தமாக இந்த சிம் கார்டுகளை கொள்முதல் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் ஹஜ் பயணிகளுக்கு டெபிட் கார்ட் வழங்கவும் முயற்சிகள் நடப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
1. Debit Card posted byIbrahim Ibn Nowshad (Chennai)[01 July 2011] IP: 119.*.*.* India | Comment Reference Number: 5677
Debit Card or Credit Card.
சல்லி இருந்தால் தானே காசு வரும்.
Why do not their International Debit Card shouldn't be used there without Service charge? Does banks of India approve this? Ministry of Extrernal Affairs should be contacted for those clarification in Embassy. Correct me if I am wrong. It's just my suggestion.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross