மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, மூளை புற்றுநோய் வருவதற்கு ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுவீடன் நாட்டின் ஓரிப்ரோ மற்றும் யுமியா மருத்துவ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் 1,200 பேரிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 97லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அதிகம் மொபைல் போனை பயன்படுத்திய 346 பேர், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர் என கண்டறிந்துள்ளனர்.
மிதமான முறையில் போனை உபயோகித்தவர்கள் நல்ல நிலையில் தான் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என, இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் தான் அதிகம் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். மூளை புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனை நேரிடையாக காதில் வைப்பதை விட, "ஹெட் செட், இயர்போன்' மூலம் பயன்படுத்தலாம் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், மூளை புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம் என, இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:
தினமலர் (30.06.2011) |