பொறியியற் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் துவங்குகிறது. சென்னை தவிர பிற ஊர்களில் இருந்து கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்களுக்கு இரு வழி பயண போக்குவரத்து கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தொழில் நுட்பக் கல்வித்துறை செய்திக்குறிப்பு விபரம் வருமாறு:-
2011 - 2012 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்கு வரும் ஒரு நபருக்கு (1 + 1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீதம் இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த சலுகையினைப் பெற சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ / மாணவிகள் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தின் (Counselling Call Letter) ஒளி நகலை சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். ஒளி நகலை (Photocopy) பெற்றுக்கொண்ட அலுவலர்கள் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டதென அழைப்பு கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயணச் சீட்டுக்களை (1 + 1) மாணவர்களுக்கு வழங்குவர். இதே நடைமுறை கலந்தாய்வு முடித்து ஊருக்கு திரும்ப செல்வதற்கும் பொருந்தும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross