25 பைசா எனப்படும் நாலணா - நேற்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக செல்லுப்படி ஆகாது என அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் இது அமலுக்கு வந்தாலும், இது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகிவிட்டது. அவ்வறிவிப்பினை தொடர்ந்து பல ஸ்தாபனங்கள் நாலணாவை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன.
நாலணாவை அரசு நிறுத்த முக்கிய காரணம் அதனை தயாரிக்க ஆகும் செலவே. நாலணாவுக்கு பொதுவாக தற்போது எப்பொருளும் கிடைப்பதில்லை.
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் - ஒரு காலத்தில் நாலணாவுக்கு வாங்க முடிந்த பொருட்களை பட்டியிலிட்டுள்ளது.
1920-30 களில் - ஒரு மூடை நெல் 1940 களில் - ஒன்னரை கிராம் வெள்ளி 1950 களில் - இரண்டு கிலோ தக்காளி 1960 களில் - ஒரு தட்டு இட்லி/தோசை 1970 களில் - படம்பார்க்க டிக்கெட் 1980 களில் - பிஸ்கட் பாக்கெட் 1990 களில் - மிட்டாய்
2. காலணாக்கு கண்ணீர் அஞ்சலி......! posted byzubair (riyadh)[01 July 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5681
அன்பு காலணாவே.....
நீ கையில் இருந்தும் காணாமல் போய் விட்டாயே....
உனக்கு உடல் இருந்தும் உயிரை பிடிங்கி விட்டார்களே......
ஏன் இந்த அவல நிலை உனக்கு....? 1920 ல் ஜொலித்த நீ... 1990 ல் மிட்டாயி ஆகி.... இப்பம் நீ எங்களுக்கு வெறும் கொட்டாயி ஆகி இருப்பது ஏனோ? இது நீ செய்த குற்றமா...?
அல்லது காலம் செய்த கோலமா...? உண்மையில் உன்குற்றமாக இருக்காது. ஏனெனில் காலம்தான் இப்பொழுது பல கோலம்களை அரங்கேற்றிகொண்டு இருக்கிறது.
என்றாலும் உன் பிரிவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்..... ok byeeeeee .
4. அன்பு காலணா... posted byM.S.ABDULAZEEZ (Guanzhou)[03 July 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 5719
சுண்டக்கா காப்பணம் சுமைகூலி முக்கா பணம் என்ற பழைய சொல்லும் காணமல் போய்விடும்?? காலனவை ஒருமுறை பார்க்க ஆசை. புகைபடம் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross