இந்திய தொலைபேசித் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள் மெகா மேளா 30.06.2011 அன்று (நேற்று) துவங்கியது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பிஎஸ்என்எல் இணைப்புகளை பெற்றுச் சென்றனர்.
தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம், தந்தி அலுவலகம், கோவில்பட்டி வாடிக்கையாளர் சேவை மையம், திருச்செந்தூர் வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவற்றில் இன்று தொடங்கி வரும் 02ஆம் தேதி சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இந்த சலுகை மேளா நடைபெறுகிறது.
தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகத்தில் இன்று துவங்கிய மெகா மேளாவை துணை கோட்ட பொறியாளர்கள் (வணிக வளர்ச்சி) கோ.வளனரசு, (மார்க்கெட்டிங்) லிங்க பாஸ்கரன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கினர்.
இதில், ரூ.49 மதிப்புள்ள பிஎஸ்என்எல் நேசம் சிம்கார்டு ரூ.10க்கும், ரூ.54 மதிப்புள்ள மதிப்புள்ள பிஎஸ்என்எல் அன்பு ஜோடி ஸ்பெஷல் சிம்கார்டு ரூ.10க்கும் வழங்கப்படுகிறது. மேலும், லேன்ட் லைன், வில் தொலைபேசி பதிவு செய்பவர்களுக்கு இன்ஸ்டலேஷன் கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதுபோல், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை பதிவு செய்பவர்களுக்கு மோடம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இன்ஸ்டலேஷன் கட்டணத்தில் ரூ.250 தள்ளுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து தொலைபேசி நிலைய வாடிக்கையாளர்களும் லேன்ட் லைன் மற்றும் பிராட் பேன்ட் சேவை மேளா நடைபெறும் இடங்களில் விண்ணப்பித்து சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோன்று பிஎஸ்என்எல் சிம்கார்டு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் போட்டோவுடன் கூடிய ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்பார்ட் இவைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் (30.06.2011) |