இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டையொட்டி, வெளிநாடுவாழ் முஸ்லிம் மக்களுக்கு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டின் நிறைவு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டவுள்ளன. அவற்றுள், வெளிநாடுவாழ் முஸ்லிம்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும் தீர்மானங்கள் இயற்றப்படவுள்ளன.
எனவே, வெளிநாடுவாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் பொருட்டு, அப்பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள், நிறைவேற்றக் கோரும் தீர்மானங்கள் பற்றிய விபரங்களை, kitlc@kayalpatnam.com என்ற, மாநாட்டின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |