Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:21:54 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6622
#KOTW6622
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 2, 2011
முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டி.வி.!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2828 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசு கேபிள் டி.வி.யை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, கேபிள் டி.வி. நிறுவனத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தனது வசமுள்ள உள்துறைக்கு அதை மாற்றியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டு வந்தது.

"கேபிள் டி.வி. நாட்டுடமையாக்கப்படும்' என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி.யை நாட்டுடமையாக்க முயற்சிகளை மேற்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.

கேபிள் ஆபரேட்டர்களுடன் சந்திப்பு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மீண்டும் செயலுக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாக, கேபிள் ஆபரேட்டர்களை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். கடந்த ஜூன் 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே அரசு கேபிள் டி.வி.யை தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். இதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.

நடவடிக்கை தீவிரம்: கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப, அதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். முதல் கட்டமாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தன் வசம் கொண்டு வந்துள்ளார். அதாவது, தனது தலைமையின் கீழ் இயங்கும் உள்துறைக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மாற்றியுள்ளார்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வந்தது. நிறுவனத்தை செயல்பட வைப்பதற்காக தனது துறை வசம் அதைக் கொண்டு வந்துள்ளார்.

இதன்மூலம், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா கண்காணிக்க முடியும். மேலும், அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளை உள்துறையின் கீழ் இயங்கும் காவல் துறையின் மூலம் களைய முடியும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிர ஆலோசனை: அரசு கேபிள் டி.வி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு அறைகளையும் அமைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டது.

இப்போது, அவை அனைத்தும் இயங்காத நிலையில் உள்ளன. அவற்றை இயங்க வைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடிக்கும் அதிகமான அளவில் பணம் தேவைப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரின் செயல்பாடுகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தபடி மூன்று மாதங்களுக்குள்ளாகவே அரசு கேபிள் டி.வி. தமிழகத்தில் செயல்படத் தொடங்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களும் பொது மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

நன்றி:
தினமணி (02.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தமிழகம் தலைநிமிரட்டும்!
posted by kavimagan (dubai) [02 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5706

பல்லாயிரக்கணக்கான கோடிகளை, இலவச தொலைகாட்சி மற்றும் கேபிள் கனக்சன் என்ற பெயரில், ஒரு சுயனலவாதியின் குடும்பம் சூறையாடிவிட்டது. தமிழகம் பட்ட கடனை அடைத்து மீண்டு எழ ஐம்பது வருடமேனும் ஆகும். மனஉறுதியும், நிர்வாகத்திறனும் கொண்ட தற்போதைய அரசு, இலவசத் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்து, வேலை வாய்ப்பினை பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

நூறு செருப்புகளை மீண்டும் மீண்டும் காட்டி, ஆனந்தப்பட்ட கும்பல், 414 கோடி BSNL மக்கள் பணத்தை, தனது பக்கம் திருப்பியதை நினைத்து நாடே திகைத்து நிற்கிறது. இவர்கள் அனைவரிடமும் அடைபட்டுள்ள ஊழல் கருப்பு பணம், மீட்டெடுக்கப்பட வேண்டும்.

அம்மா அவர்களே! தொடரட்டும் உங்கள் அதிரடி! உங்களது அசாத்தியமான செயல்பாட்டால் தமிழகம் மீண்டும் தலை நிமிரட்டும்! மக்கள் உங்களோடு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாணயம்: ஒரு பார்வை!  (3/7/2011) [Views - 13133; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved