காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 (இன்று) வரை நடைபெறுகிறது.
இருபத்து ஒன்பதாம் நாளான நேற்று, (02.07.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை இலங்கை - கண்டி மண்டல ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபழ்லுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்கினார். அவரைத் தொடர்ந்து, சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சுருக்க உரையை, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.
நேற்று மாலையில், இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பெயரில் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாயீல் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மின்ஹதுல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ என்ற மவ்லிதும், இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகழ்பாடும் பைத்தும் ஓதப்பட்டது. இந்நிகழ்விற்கு, காயல்பட்டினம் மஸ்ஜித் அல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆ ஓதி இரவு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இன்று புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகளின் இறுதி நாளாகும். இன்று அதிகாலை 05.15 மணிக்கு, இறைமறை வசனங்களுடன் ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் இறுதிநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்கிறார்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, குருவித்துறைப் பள்ளிவாசல் மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ புகாரிஷ் ஷரீஃப் நிறைவுப் பகுதியை துவக்கமாக ஓதுகிறார்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ வழங்குகிறார்.
அவரைத் தொடர்ந்து, கூட்டு துஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் ம்வலவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ உரையாற்றுகிறார். பின்னர், மவ்லவீ பி.கே.முஹம்மத் பாதுஷா ஷக்காஃபீ மலையாளத்தில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, அபூர்வ துஆ நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தை நஹ்வீ எம்.எம்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா வழங்குகிறார்.
இறுதியாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்.
இன்று மாலையிலும், இரவிலும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
இறுதிநாளை முன்னிட்டு, காலை - மாலை அனைத்து நிகழ்ச்சிகளும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
M.H.ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|