மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய விசயங்களில் காயலர்களுக்கு வழிக்காட்டும் நோக்கில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நேற்று
மாலை (ஜூலை 3) 5:00 மணி அளவில் நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் உள்ள Conference Hall இல் நடைபெற்ற இக்கூட்டத்தில்
துறை வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு ஆடிட்டர் எஸ்.எஸ். ரிபாய் தலைமை தாங்கினார். கூட்ட நிகழ்வுகளை முக்தார் தொகுத்து வழங்கினார்.
முதலாவதாக ஹாபில்
எம்.என்.புஹாரி கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்) - கூட்டத்திற்கு வந்திருந்த
அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தின் அவசியம் குறித்தும், அதன் குறிக்கோள்கள் குறித்தும் விரிவாக ஷமீமுல் இஸ்லாம் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து - கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இதில் ஹாஜி குளம் இப்ராஹீம், ஹாஜி பாளையம் ஹபீப், ஹாஜி வாவு மஸ்னவி, ஹாஜி ஹெச்.என். சதக்கத்துல்லாஹ், கலாமி யாசர், ஹாஜி
எம்.என். அப்துல் காதர் (முத்துவாப்பா), ஹாஜி குளம் முஹம்மது தம்பி, நசீர் அஹ்மத் (மெட்ரோ), டாக்டர் நவாஸ், டாக்டர் கிஸார், ஷேக்
சுலைமான் (Earth Science), ஹாஜி கே.ஏ.எம். அபூபக்கர், ஷாஜஹான், முஹம்மது இப்ராகிம், வழக்கறிஞர் துளிர் அஹ்மத், பல்லாக்
சுலைமான், ஆடிட்டர் கிதுர், சாளை பஷீர் உட்பட பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் சாராம்சம் :-
-- வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் ஆகிய விசயங்களுக்காக சென்னை வரும் காயலர்களுக்கு தங்கும் இட வசதி
-- வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை துரிதமாக பரிமாறிக்கொள்வது
-- இலவசமாக IT வகுப்புக்கள் நடத்துதல்
-- அரசு திட்டங்கள் குறித்து முழு தகவல்களை மக்களிடம் எடுத்து செல்வது
-- மருத்துவ உதவி நாடி சென்னை வருவோருக்கு குறைந்த கட்டணத்தில் மருந்து மற்றும் பரிசோதனை உதவிகள்
-- புதிய துறைகள் குறித்து கல்வி வழிக்காட்டுதல் நிகழ்ச்சிகள் காயல்பட்டினத்தில் நடத்துவது
-- சிவில் சர்விசஸ் (IAS, IPS) துறைக்கு சென்னையில் வழிக்காட்டுவது
நீண்ட கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன:-
1) Kayalpatnam - Chennai Guidance Committee (KCGC) [காயல்பட்டினம் - சென்னை வழிக்காட்டல் குழு] என்ற பெயரில் சேவை புரிவது
2) ஒருங்கிணைப்புக்குழு, கல்விக்குழு, வேலைவாய்ப்புக்குழு, மருத்துவக்குழு என நான்கு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது
ஒருங்கிணைப்புக்குழு
(i) ஆடிட்டர் எஸ்.எஸ். ரிபாய்
(ii) ஹாஜி ஹெச்.என். சதக்கத்துல்லாஹ்
(iii) ஹாஜி எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்)
கல்விக்குழு
(i) ஹாஜி பாளையம் ஹபீப்
(ii) ஹாஜி வாவு மஸ்னவி
(iii) வழக்கறிஞர் துளிர் அஹ்மத்
(iv) ஷேக் சுலைமான் (Earth Science)
(v) எம்.எம். செய்யத் இப்ராஹீம்
வேலைவாய்ப்புக்குழு
(i) ஹாஜி குளம் இப்ராஹீம்
(ii) பல்லாக் பி.ஏ.கே. சுலைமான்
(iii) ஹாஜி எம்.என். அப்துல் காதர் (முத்துவாப்பா)
மருத்துவக்குழு
(i) டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
(ii) டாக்டர் ஏ. நவாஸ்
(iii) டாக்டர் டி. கிஸார்
3) இக்குழுக்கள் தங்கள் செயல்திட்டத்தினை (Action Plan) வடிவமைத்து, எதிர்வரும் ரமலான் மாதத்தில் கூடி, குழுவினர் அனைவருக்கும் அதனை
சமர்ப்பிப்பது
இக்குழு குறித்தும், அதன் செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூற விரும்புவோர் - kcgcommittee@gmail.com என்ற ஈமெயில் முகவரியை தொடர்பு கொள்ளும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புகைப்படங்கள்:
அரபாத்
|