ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா 1950 வரை பிரிட்டிஷ் காலத்து நாணயத்தையே பயன்படுத்தி வந்தது.
ஆகஸ்ட் 15, 1950 அன்று அறிமுகம் செய்யப்பட்ட நாணயங்களே சுதந்திர இந்தியாவின் முதல் நாணயங்கள். பிரிட்டிஷ்
அரசர் படத்துக்கு பதிலாக சிங்க உருவம் (அசோக் பில்லர்) நாணயங்களில் பதிக்கப்பட்டிருந்தது.
துவக்கமாக ஒரு ரூபாய் நாணயம், அரை ரூபாய் நாணயம், கால் ரூபாய் நாணயம், இரண்டு அணா, ஒரு அணா, அரை
அணா மற்றும் ஒரு பைசா என்ற மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
1957 இல் இந்தியா decimal / metric முறைக்கு மாறியது. அதன் விளைவாக நாணயங்களை குறிப்பிடும் முறையும் மாற்றப்பட்டது. ஒரு ரூபாய் என்பதிலும், ஒரு பைசா என்பதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிதாக 50 நயா பைசா என்றும், 25 நயா பைசா என்றும், 10 நயா பைசா என்றும், 5 நயா பைசா என்றும், 2 நயா பைசா என்றும், 1 நயா பைசா என்றும் அறிமுகம் செய்யப்பட்டன. நயா என்பது ஹிந்தி மொழியில் புதியது என குறிக்கும். பழைய நாணயத்தை வித்தியாசப்படுத்தி காண்பிக்க 1964 வரை நயா என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தது.
1964 க்கு பிறகு செலவினை கருதி, நாணயங்கள் - அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டன. அவை 1, 2, 3, 5, 10 மற்றும் 20 பைசா மதிப்புகளில் வெளியிடப்பட்டன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாணயங்கள் Cupro - Nickel என்ற உலோகம் கொண்டும், Ferratic Stainless Steel உலோகம் கொண்டும் தயாரிக்கப்பட்டுகின்றன.
ஜூன் 30 முதல் செல்லாக்காசான 25 பைசா கடந்த ஆண்டுகளில் எடுத்த ரூபங்கள் -
|