Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:18:28 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6629
#KOTW6629
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 2, 2011
எல்.கே.மேனிலைப்பள்ளி தமிழாசிரியர் திரு.இருதயராஜ் பணி ஓய்வு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 4321 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் ‎‎1983ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராகவும், ‎‎1994ம் ஆண்டு முதல் தமிழாசிரியராகவும், 2009ம் ‎ஆண்டு முதல் முதுநிலை தமிழாசிரியராகவும் பணியாற்றிய ஆசிரியர் எஸ். ‎இருதயராஜ் M.A.,B.Ed., ஜூன் 30 அன்று - 28 ஆண்டுகள் பூர்த்தி செய்து - ‎ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு ‎பெற்றுள்ளார்.

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பயின்ற பழைய மாணவர்கள் 94423 06777 என்ற அலைபேசியில் அவரை தொடர்பு கொள்ளலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பெயரிலேயே இருதயத்தை கொண்ட எங்கள் தமிழ் ஆசானே ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [02 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5707

பெயரிலேயே இருதயத்தை கொண்ட எங்கள் தமிழ் ஆசானே .. தங்களிடம் நான் தமிழ் பயின்ற காலத்தை நினைத்து பெருமை படுகின்றேன்.. தாங்கள் பணியில் இருந்து ஒய்வு பெற்றாலும் எங்கள் மனதில் இருந்து ஒய்வு பெறவில்லை. எங்கள் தமிழ் உச்சரிக்கும் இடத்தில எல்லாம் தங்களின் பெயரும் கண்டிப்பாக உச்சரிக்கும். தாங்கள் பூரண உடல் நலனுடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

உங்கள் அன்பு மாணவன்
புஹாரி ( முத்துவாப்பா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இருதய ராஜ் சார்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [02 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5711

என் பள்ளி மற்றும் கல்லூரி பேரசிரர்களில், என் மனதில் இடம் பிடித்த சில ஆசிரியர்களில் ஒருவர் இருதய ராஜ் சார்.. அவரின் ஓய்வு காலம் அமைதியாக அமைய வாழ்த்துக்கள்..

மாணவர்களுடம் அன்பாக பழகி அதே சமயம் சற்று ஸ்ட்ரிக்ட் ஆகா இருந்து பாடம் படித்து கொடுத்துவர்.. பலரை மேலை தூக்கி விட்ட அசையாத ஏணி.... பலருக்கும் ஒழி கொடுத்து கரையாத மெழுகு வருத்தி.. பல்லாண்ட வழ வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எமக்கு பிடித்த ஆசிரியர்களில் ஒருவர்
posted by Hasan (Khobar) [02 July 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5714

பள்ளியில் பயிலும் காலத்தில் படிப்பை தவிர்த்து பல நல்ல (Extra Curricular Activities) செயல்களில் எம்மை ஈடு பட வாய்ப்பும் ஊக்குமும் அளித்தவர். பெயரில் உள்ளது போல நல்ல இருதயம் படைத்த நபர் அவர். அவரின் ஒய்வு காலம் சிறந்ததாக இருக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பார்கத்தான் ஸ்ட்ரிக்ட்
posted by nawazsahib (Dammam ) [02 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5715

எங்கள் இருதய ராஜ் சார் பார்கத்தான் ஸ்ட்ரிக்ட் அன்ன பழக குழந்தை மனசு மாதிரே. அவருடைய ஓய்வு

பூரண உடல் நலனுடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..

உங்கள் மாணவன்
நவாஸ் சாஹிப்

Modeartor:கருத்து தெரிவித்தவர் வேண்டுகோளுக்கிணங்க, கருத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தன் பெயர் போன்று நல் மனம் உள்ளவர்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [03 July 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5718

மாணவர்களிடம் பழகுவதில் நல்ல ஆசிரியர். சார் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தமிழ் போல வாழ்க!
posted by kavimagan (dubai) [03 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5721

பணி ஓய்வு பெரும் தமிழ் ஆசிரியர் அவர்களே! நான் உங்களிடம் பயின்ற மாணவன் இல்லையெனினும், நான் நேசிக்கும் தமிழை, போதித்த ஆசிரியர் என்ற வகையில் உங்களை வாழ்த்துகிறேன்.

இந்த நல்ல நேரத்தில்.எனது தமிழாசிரியர்கள்,மறைந்த திரு. குழந்தை சார்,ஜனாப்.காஜா முஹைதீன் சார், திரு.இளங்கோ சார் ஆகியோரை நன்றியோடு நினைவு கூர்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ் போல நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Heartfelt Wishes
posted by Cnash (Makkah ) [03 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5725

There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it. You were the candle and your beam reflects on the life of a lot of students like us. I do remember and tribute your self-sacrificing efforts and friendly affiliation with us. Wish your retirement days to be happy, peaceful and in good health.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நெஞ்சார வாழ்த்துகிறேன்...........
posted by Shameemul Islam SKS (Chennai) [04 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5738

இவரது கண்டிப்பில் அன்பு ரீங்கரித்துக்கொண்டிருக்கும்.
முகத்தில் இனிமை எப்போதும் இருக்கும்.
இவரது ஓய்வு காலம் குடும்பத்தவரோடு நிம்மதியாய் கழிய நோயற்ற வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. 'மெழுஹுவர்த்தி!
posted by Dr.Raiz (Sydney) [04 July 2011]
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 5741

Dear brothers,

Do you know sir was not only a good teacher, but also a good writer! He used to write stories and poems in children’s magazines. I still remember his story ‘Mezhuhu varthi’ (candle) in ‘Gokulam’. That story inspired me and I also started to write few after that?!. He is a very soft and gentle person. Actually, he taught maths for us. Sir, please accept out thanks and we will pray for your peaceful life!

Dr.Raiz


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. “பல்லாண்ட வழ வாழ்த்துக்கள்.. “
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [04 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5742

எனக்கு என்னவோ சாஹிப் நவாஸ் அவர்களின் கருத்தில் உள்ள வாழ்த்து செய்தியை படித்த பின் தான் ஐயா . இந்த ஓய்வு முடிவினை எடுத்தார்களோ என்னவோ தெரியவில்லை. அப்படி சாஹிப் நவாஸ் என்ன வாழ்த்தினார் “பல்லாண்ட வழ வாழ்த்துக்கள்.. “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. கணக்காசிரியர்!
posted by SK Salih (Kayalpatnam) [04 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5750

எனதன்பிற்குரிய ஆசிரியர் இருதயராஜ் அவர்களிடம், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்றாண்டுகள் கணக்கு பாடம் கற்றுள்ளேன். எங்கள் பள்ளிக்காலத்திற்குப் பின்புதான் தமிழாசிரியராக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். சகோதரர்கள் குறிப்பிட்டது போல, கண்டிக்கத் தெரிந்த அவர் கனிவின் இலக்கணமாகவும் திகழ்ந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹனீஃபா சார் அவர்களின் மகனது திருமணம் ஆறுமுகநேரி அன்னை கல்யாண மண்டபத்தில் நடந்தது. (பழைய சாந்தி திரையரங்கம்தாங்க அது! வாரந்தோறும் வியாழன் மதியம், சனி மதியம் மட்டும் எங்களுக்கு அங்குதான் க்ளாஸ் நடக்கும்... ஒரு வாரம் கூட ஆப்சண்ட் ஆனதேயில்லைன்னா பார்த்துக்கோங்க...)

அங்கு எமதன்பு வாத்தியார் இருதயராஜ் அவர்களை அவர்களது மனைவி மற்றும் மகள் சகிதம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. “அம்மா, உங்க ஆத்துக்காரரிடம் நாங்கள் கற்ற காலம் பொன்னானது... அப்போது பெற்ற படிப்பை விட, நான் வாங்கிய அடி அதிகம்...” என்றேன். அனைவரும் சிரித்தனர். “எலே... அந்த அடியைப் பத்தி இப்ப என்னலே சொல்றே...?” என்று கேட்டார் சார் அவர்கள். “இன்றைய மாணவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் சார்... அந்த அடிதான் எங்களை இந்தளவுக்காவது கட்டுப்படுத்தியது... இன்று அதற்கு அரசு தடை விதித்து விட்டதால், மாணவர்களின் கட்டுப்பாடு வெகுவாகக் குறைந்து வருகிறது...” என்றேன்.

“என் பையன் சொல்றத கேட்டுக்கிட்டீங்களா...?” என்று தன் குடும்பத்தாரிடம் அவர் மகிழ்வோடு சொன்னார்.

அதே திருமணத்தில், நான் பாடாய்ப்படுத்திய என் அன்பு (அப்போதைய) தலைமையாசிரியர் திரு.ஞானய்யா அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது... பார்த்ததும் கட்டியணைத்துக் கொண்டார். சுமார் 2 நிமிடங்கள் அந்த இதமான அணைப்பு கிடைத்தது. “நாம மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக நடந்திருந்தால், நமது மாணவப் பருவத்திலேயே இந்த அணைப்ப கிடைத்திருக்குமே...” என்று அப்போதுதான் உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.

அங்கு, என் வாழ்வில் ஒளியேற்றிய மற்றோர் ஆசிரியரையும் தேடினேன்... தேடினேன்... கடைசி வரை காணக் கிடைக்கவேயில்லை.... அங்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தபோதுதான் அவர் சில காலங்களுக்கு முன்னர்தான் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கண் கலங்கினேன். அந்தத் திருமுகம், எங்களுக்கு ஆங்கில அரிச்சுவடியை மனதிலேற்றிய அன்பு ஆசான்... பெயரிலேயே “திரு”வைக் கொண்ட திருமலை சார் அவர்கள்...

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்காக திருநெல்வேலி ரயிலுக்குக் காத்துக்கொண்டிருந்தோம் நானும், எனது சாச்சப்பா ஹாஜி கம்பல்பக்ஷ் பாக்கர் சாஹிப் அவர்களும். அப்போது திருமலை சார் அங்கு வந்தார்கள்... என்னைப் பார்க்கும் முன் என் சாச்சப்பாவைப் பார்த்துவிட்ட அவர்கள், “என்னப்பா பாக்கர் ஸாஹிப், நல்லா இருக்கியா...?” என்று கேட்டதும், “சாச்சப்பா எங்க சாரை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று நான் கேட்க, “அட, அது சரி... அவங்க முதல்ல எங்களுக்கு சார்... நீயெல்லாம் அப்புறம்தான்....” என்றார்கள். அதுதான் நான் திருமலை சாரை கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு எனக்கு அவர்களைக் காணக் கொடுத்து வைக்கவில்லை.

அன்பின் ஆசிரியர் இருதயராஜ் அவர்கள், தனது எஞ்சிய வாழ்வை வழமைபோல சமூக நலப்பணிகளில் கழிப்பார்... அவரும் எங்களுக்கு கற்றுத் தந்ததுதான் இந்த சமூகப்பணிகள்... நேரான வழியில் அவர் சீரான நடைபோட்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தமிழ் ஆசான்...!
posted by Sulaiman (Chennai) [04 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5755

எங்கள் பள்ளியில் எல்லோருக்கும் பிடித்தமான கண்ணியமிகு ஆசான் ....!

தமிழை மிக எளிய முறையில் அருமையாக கற்று தந்த ஆசிரியர். எங்களுக்கு தமிழ் மீது பற்று வர முழு காரணமானவர். அவர்களிடம் நாங்கள் வாங்கிய அடிகளை விட பரிசுகள் அதிகம்...!இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.....!!!

எங்களது வகுப்பில் பயின்ற அனைவரும் முஸ்லிம் மாணவர்கள், கற்ற பாடம் ஹிந்து இதிகாசங்கள், கற்று தந்த ஆசான் ஒரு கிருத்தவர் என ஒரு மத நல்லிணக்கத்தை வாழ்ந்து வழி காட்டியவர்.

இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் வழங்கிட பிராத்திக்கின்றோம்.

அன்பு மாணவர்கள்,

சுலைமான் & மஷாகிர் அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வாழ்க வளமுடன்
posted by Abdul Majeed (Mumbai) [04 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5756

இருதய ராஜ் சாரின் பிரியமான மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன். வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நீர் கற்று கொடுத்தது இலக்கணம் மட்டும் இல்லை
posted by Abdul Razak (Chennai) [04 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5758

செய்தியை பார்த்த உடனேயே கருத்து எழுதனும்னு மனதில் தோன்றியது. தமிழாசானே உங்களிடம் 4 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் பயின்றுள்ளேன், (7th to 10th). நான் மிகவும் பயப்பட்ட ஆசிரியர் நீங்கள் ஒருவர்தான், அதே நேரம் மிகவும் பிடித்த ஆசிரியரும் நீரே!

தமிழ் எழுத்துக்களை விட அதிக முறை உம்மிடம் அடிகளை வாங்கியதும் நானாகத்தான் இருக்கும். உறுதியாக சொல்வேன் , யாரும் போட்டிக்குண்டோ? ஆனால் இன்று தமிழில் யாராவது தவறுதலாக இலக்கணம் சொல்லும் போது , அதை திருத்தி விட்டு உம்மை நினைவு கூற இதுநாள் வரை மறந்தது இல்லை. கதை விடலங்க. நன்றி அய்யா , தமிழ் மட்டுமின்றி பல விஷயங்களை உமது பிரம்படியும் , உபதேசமும் எனக்கு கற்று கொடுத்துள்ளது, மிக்க நன்றி, இறைவன் உம் எஞ்சிய வாழ்க்கையை நேரான வழியில் ஆக்கித்தர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. எனக்கு பிடித்த தமிழாசிரியர்...
posted by Ahamed Mohideen (Chennai) [04 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5760

தமிழை மிக எளிய முறையில் அருமையாக கற்று தந்த ஆசிரியர். எங்களுக்கு தமிழ் மீது பற்று வர முழு காரணமானவர்.. குறிப்பாக எனது 9 - 10 வகுப்புகளில் தமிழ் பாடத்தில் 90 க்கு மேல் எடுக்க கற்றுக்கொடுத்தவர் இருதயராஜ் சார் அவர்கள். சகோதரர் மசாகிர் & சுலைமான் கருத்து முற்றிலும் உண்மை.

அன்பின் ஆசிரியர் இருதயராஜ் அவர்களின் எஞ்சிய வாழ்வினை சிறப்பாக்கி வைத்து அவர் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பு மாணவன்,
அஹ்மத் முஹைதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இதய அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
posted by Mafasz (Kayalpatnam) [19 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6182

He is not only a best tamil teacher but also a good social teacher too! From 8th to 12th he came with us! He taught us tamil as well as social while we are studying 8th! After that full and fully tamil! Now we entered into college life that's why we gave him a rest! I was just inspired by his way of teaching; It's awesome! He is the man of encouragement! He is completely different from other teachers! Such a good and best one! He taught us not only subjects beyond that he taught us more & more good things! I would like to thank Allah to make me as his student and I'm very proud to be his student!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாணயம்: ஒரு பார்வை!  (3/7/2011) [Views - 12909; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved