ஸஃபான் (1432) மாத அமாவாசை ஜூலை 1 வெள்ளியன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 8:54 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் மதியம் 2:24. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:39 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:43. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 4 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காண இயலாது. அன்று பசிபிக் கடல் பகுதிகளில் மட்டும் பிறையை காண வாய்ப்புள்ளது.
ஜூலை 2 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:36. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 28 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம்.
ஜூலை 2 அன்று ரஷ்யா, ஐரோப்பா ஆகிய இடங்களின் வட பகுதிகளை தவிர உலகின் பிற இடங்களில் பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜூலை 2 - ஸஃபான் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 1 (அமாவாசை) அன்று ரஜப் 28
முடிந்திருக்கும். ஜூலை 2 அன்று அவர்களுக்கு ரஜப் 29 ஆகும். ஜூலை 2 அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காணலாம். ஆகவே ஜூலை 3 அன்று அவர்களுக்கு ஸஃபான் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 1 (அமாவாசை) அன்று ரஜப் 29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதிகளில் மட்டும் பிறையை காண வாய்ப்புள்ளது. அன்று உலகில் பிறை காணப்பட்ட தகவல் வந்தால் ஜூலை 2 அன்று ஸஃபான் 1 ஆகும். தகவல் கிடைக்கப்பெறாவிட்டால் அவர்களுக்கு ஜூலை 3 அன்று ஸஃபான் 1 ஆகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross