காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இறுதி நாள் நிகழ்ச்சிகள் துவங்கிவிட்டதையடுத்து, தினமும் காலையில் நடைபெறும் வழமையான மார்க்க சொற்பொழிவுகளுடன், மாலையில் நடைபெறும் இதர சிறப்பு நிகழ்ச்சிகளும், அபூர்வ துஆ தினம் வரை நேரலையாக வலைதளத்தில் ஒலிபரப்பப்படவுள்ளதாக நேரலைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றிரவு 07.00 மணிக்கு சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான மவ்லிதும், இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் மீதான புகழ்மாலை - மர்ழிய்யாவும் ஓதப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளனைத்தும் http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
M.H.ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|