காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
இருபத்து எட்டாம் நாளான நேற்று, (01.07.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரை மற்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணம் குறித்த தொகுப்புரையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முதன்மைப் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூக்கர் சித்தீக் மிஸ்பாஹீ வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.
நேற்றிரவு 07.00 மணிக்கு சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான மவ்லிதும், இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் மீதான புகழ்மாலை - மர்ழிய்யாவும் ஓதப்பட்டது.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை - கண்டி மண்டல ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபழ்லுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்குகிறார். அவரைத் தொடர்ந்து, சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சுருக்க உரையை, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்குகிறார்.
இன்று மாலையில், இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பெயரில் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாயீல் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மின்ஹதுல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ என்ற மவ்லிதும், இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகழ்பாடும் பைத்தும் ஓதப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு, காயல்பட்டினம் மஸ்ஜித் அல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்குகிறார். எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆ ஓதி இரவு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.
இறுதிநாளை முன்னிட்டு, காலை - மாலை அனைத்து நிகழ்ச்சிகளும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
M.H.ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|