சென்னைக்கு வரும் காயலர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வழிகாட்டி உதவுவதற்காக கடந்த 03.07.2011 அன்று சென்னையில் துவக்கப்பட்ட Kayalpatnam - Chennai Guidance Committee (KCGC) காயல்பட்டினம் - சென்னை வழிக்காட்டல் குழுவிற்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் சென்னைவாழ் காயலர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில், நம் தாயகமாம் காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களுக்கு பல்வேறு துறைகளிலும் வழிகாட்டல்கள், உதவிகள் புரியும் நன்னோக்குடன் துவக்கப்பட்டுள்ள Kayalpatnam - Chennai Guidance Committee (KCGC) காயல்பட்டினம் - சென்னை வழிக்காட்டல் குழுவிற்கு எமது சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
நல்லதொரு துவக்கம் இது! இவ்வமைப்பின் துவக்கம் காலத்தின் கட்டாயம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
கருத்து வேறுபாடுகளைக் கடந்து நம் நகர் மக்களுக்கு உங்கள் அமைப்பு தரமான சேவைகளை நிறைவாக வழங்கிட வாழ்த்துவதோடு, தங்களின் அனைத்து நற்சேவைகளுக்கும் வல்ல அல்லாஹ் பூரணமான நற்கூலிகளை வழங்கியருள்வானாக என பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |