காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளைச் சார்ந்த ஏழை மாணவ-மாணவியர் 50 பேருக்கு பள்ளிச் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி 05.07.2011 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாலை 05.30 மணிக்கு பைத்துல்மால் அலுவலகத்தில் அதன் செயலாளர் ஹாஜி டூட்டி சுஹரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பைத்துல்மால் பொருளாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, மாணவ-மாணவியருக்கு சீருடைகளை வழங்கினார்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் கலீல், முன்னாள் மேலாளர் என்.ரஃபீக் அஹ்மத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காயல்பட்டினம பைத்துல்மால் அறக்கட்டளை அலுவலகப் பொறுப்பாளர்களான எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.தாவூத் நெய்னா ஆகியோர் செய்திருந்தனர். |