இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் விருந்தினர்களைத் தங்க வைத்து, உபசரித்து வழியனுப்புவது வரை செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக இன்றிரவு 09.00 மணிக்கு, மாநாட்டு விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில், காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டிலுள்ள அவரது இல்லத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டின் அனைத்துக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் அங்கத்தினர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், விருந்தினர் உபசரிப்பிற்காக இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அவர்களை தங்க வைப்பதற்கான வீடு ஏற்பாடுகள், அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் குறித்த விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அக்கூட்டத்தில் லேண்ட்மார்க் ஹாஜி ராவண்ணா அபுல்ஹஸன் விளக்க அறிக்கை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்ற பின்னர், இரவு 10.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. |