மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று நேரில் அவர் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனுக்கும் பங்கு உண்டு என்று சி.பி.ஐ., நேற்று தெரிவித்தது. இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி மாறன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாநிதியை பதிவி விலகும்படி பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் கூட்ட முடிவிற்கு பின்னர் தன்னுடைய தில்லி வீட்டிற்கு வந்தார். அதன்பின்னர் அந்த வீட்டை காலி செய்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. தனக்கு தானே ஆப்பு வைப்பது posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 July 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5818
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி..
இந்த 2G விவகாரம் அரசல் புரசலாக இருந்து, யாருக்கும் தெரியாமல் இருந்த சமயம், ஆண்டி முத்து ராசாவை பழி தீர்ப்பதற்காக இந்த விவகாரத்தை, சன் டிவியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி உலகம் அறிய வைத்து, உச்ச நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு ஊதி பெருசாக ஆக்கினாயே..!! அந்த புலியே உன்னை அடித்துவிட்டது பார்த்தாயா...
3. ஆப்பு ! ஆஆ....பூ posted bykavimagan (dubai)[07 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5819
பெரியார், அண்ணாவின் கனவு நிறைவேறிக்கொண்டே
இருக்கிறது. பொழுது போக்காக மக்களின் வரிப்பணத்தை
பழுது பார்த்தவர்கள், திகாரில் அழுது புலம்பும் காட்சிகள்
ஊடகங்களில் நாறுகிறது. ஒதுக்கீட்டில்,பதுக்கீடு செய்யும்
கருணாநிதியின் வியாதி கனிமொழி,தயாநிதி என்று
தலைமுறையாய்த் தொடர்கிறது.
ஜெயாவிற்கு பொருத்தமான ராசி எண் ஒன்பதோ 7 -7 - 2011 ல்
ராஜினாமா செய்துள்ள தயாநிதிக்கும் பொருந்துகிறதா
என்பதை நண்பர்கள் கூட்டிக் கழித்து பார்க்க வேண்டும்.
எட்டு எட்ட திகார் ஜெயில பிரிச்சுக்கோ! இதில்
எந்த எட்டு கருணாக்குன்னு புரிஞ்சுக்கோ!
அது எப்படி புரியும்? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம்?
5. பணம் விழுங்கும் முதலை தயாநிதி posted bynawazsahib (Dammam )[07 July 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5822
கலைஞர் தலைமையில் டில்லியில் சிறை நிரப்பு போராட்டம்
இந்த கருணாநிதி பாம்பு பல்லிகளுக்கு இடையே பாளையங்கோட்டை சிறையில் இருந்தவர்.அப்படி சிறையில் இருந்ததால்தான் தமிழகத்தை ஆள வாய்ப்பு கிடைத்தது.அதுபோல கனிமொழியும் தில்லி சிறையில் இந்த இள வயதில் இருப்பதால் அவருக்கு மத்திய அரசை ஆளும் வாய்ப்பு எதிர்காலத்தில் மிகப் பிரகாசமாக இருக்கிறது.
அதனால் உடன் பிறப்புகளே மனம் சோர்ந்து விடாமல் இந்த போராட்டத்தில் கலந்து தில்லி திஹார் சிறையை நமது தமிழ்மக்களால் நிரப்பிவிடுவோம். அதற்கு முன்னேற்பாடாக தயாநிதியை அந்த சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுகிறேன்..................
கடந்த பாராளுமன்ற தேர்தலில்
முஸ்லிம் கட்சி வேட்பாளர் எதிராக வன்முறை நடத்தி வெற்றி அடைந்த உனக்கு சி.பி.ஐ. மிக விரைவில் பரிசாக தில்லி திஹார் ஜெயில் சகோதரி அறையில் அருகாமையில் அறை தயாராகி உள்ளது """
6. Re:தயாநிதி மாறன் ராஜினாமா!... posted byvsm ali (kangxi, Jiangmen, China)[07 July 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 5823
" தயார் நிதி மாறன் ". எல்லாம் தயாராக வைத்திருந்து , உடனே ராஜினாமா கடிதம் , உடனே வீட்டை காலி செய்தல் ......... ஹ்ம்ம்ம் மானஸ்தன் .
எல்லாம் " பெருசு " சொல்லி கொடுத்த ஐடியா .
உங்களை அன்புடன் வரவேற்பது திகார் ஜெயில் '''''''உங்கள் நல்வரவே எதிர் பார்க்கும் கனிமொழி அண்ட் சரத் கோ .''''''
ஹலோ,திகார் சிறைத்துறை கண்காணிப்பாளரே, நம்ம அண்ணன் தயாநிதி உள்ள வ்ரப்போகிறார். அவருக்காக நல்ல காற்றோட்டம் உள்ள மாதிரி ஒரு அறை தயாராக வைக்கவும். கொஞ்சம் கனியிடம் தொலைபேசி கொடுக்க முடியுமா.
கனியிடம்................அம்மா கனி தயா மாமா உள்ள வருவதற்காக ஏற்பாடு நடந்துக்கொண்டு உள்ளது. உனக்கு பிடித்த மணப்பறை முறுக்கு,சேலத்து மாம்பலம்,திருநெல்வேலி அல்வா,திருப்பதி லட்டு .................எல்லாம் வாங்கி அனுப்புறேன் வாங்கிக்க. அழுவாமல் சாப்பிடு. மாமா வந்தபிறகும் அழுது கொண்டு இருக்காக் கூடாது. பெரியம்மா கூட உன்னோடு வந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அப்பா கூட உன்னை நினைத்து சாப்பிடாமல் உள்ளார். நீ கவலைப்படாமல் இரு. அடுத்தது யார் என்று கூடிய விரைவில் சொல்கிறோம்.அதுவரை சமத்தாக இருக்கவும்....
9. Re:தயாநிதி மாறன் ராஜினாமா!... posted byjamal (colombo)[08 July 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5827
கனிமொழி, தயாநிதி, கலாநிதி, சன் பிக்சர்ஸ், அழகிரி, ஸ்டாலின்..... தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி பண்ணிய, இவர்கள், இனி ஜெயிலில் குடும்பம் நடத்த வேண்டியதுதான். ஒரு குறை கருணாநிதி மட்டும் இல்லை. அவரும் கூடிய விரைவில் வருவார் சற்கர நாற்காலியோடு.... பொறுத்திருங்கள். உங்களுக்கு வழிகாட்டி அவர்தானே!....
10. Re:தயாநிதி மாறன் ராஜினாமா!... posted byCnash (Makkah)[08 July 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5837
அப்பனுக்கு புள்ளே தப்பாமே பொறந்திருக்கு!! பெரிசு நீர் தான் பாளையங்கோட்டை சிறையில் பாம்புகள் பல்லிகள் நடுவில் இருந்தவர் தானே, அப்படியே புள்ளை, பெரபுள்ளைகளை வளர்க்கும் பொது ஒழுங்கா சொல்லி கொடுத்து, ஜெயில் பக்கம் எல்லாம் போகதே, என்னை போல திருடாதே என்று சொல்லி இருக்கணும்... எப்போ நாட்டை திருடி உள்ளே போனப்புறம், கனிமொழி க்கு உடம்புலே கொப்புளம் வந்திருக்கு, தயாநிதிக்கு அப்பளம் வந்திர்க்குன்னு புலம்புனா!!
அய்யாவின் கதை வசனத்தில்,
தயாவின் இயக்கத்தில்...............
ராசா அண்ணன் கனி அக்கா இணைத்து கலக்கும்....
சூரிய குடும்பம் வழங்கும் "திஹார் ஜெயிலில் தி.மு.க"
அடுத்து உள்ளே செல்பவர் யார் என்று
மக்களை எதிர்பார்ப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் கதை.
காணத்தவறாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross