தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
தமிழக அரசின் உயர் கல்விக்கான அமைச்சர் பி.பழனியப்பன் - கலந்தாய்வில் கலந்துக்கொண்டு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கல்லூரி அனுமதி சான்றிதழை வழங்கினார்.
இன்று அழைக்கப்பட்ட 1025 மாணவர்களில், 718 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். முதல் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
Open Competition - 42,414
BC (Muslim) - 4835
BC - 36,416
MBC - 27,634
SC (Arunthathiyar) - 4,154
SC - 20,760
ST - 1,387
மொத்தம் - 137,600
இன்று சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 417
BC (Muslim) - 9
BC - 228
MBC - 50
SC (Arunthathiyar) - 1
SC - 1
ST - 0
FOC - 12
மொத்தம் - 718 |