காயல்பட்டினம் நெய்னார் தெருவிலமைந்துள்ள மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளிவாசலின் சார்பில், வரும் ரமழான் மாத நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பொருளுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் இஃப்தார் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இறையருளால், நமது மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் அனைத்து நிர்வாகப் பணிகளும் உங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளோடும் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்!
பள்ளி பணியாளர்களுக்கு தரமான ஊதியம், இஃப்தார் நிகழ்ச்சிகளில் சிறப்பான ஏற்பாடுகள் என பல புதுமைகளைப் புகுத்தி இப்பள்ளி துவங்கப்பட்ட காலம் முதல் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், வரும் ரமழான் மாத நோன்பு துறப்பு - இஃப்தார் ஏற்பாடுகளை செவ்வனே செய்வதற்காக பின்வருமாறு ஏற்பாட்டுக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது:-
தலைவர்:
ஹாஜி கத்தீப் சுல்தான்
துணைத்தலைவர்:
ஜனாப் எம்.கே.முஹம்மத் அலீ
செயலாளர்:
பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி எம்.எஸ்ஸி.
இணைச் செயலாளர்கள்:
ஹாஜி எச்.எம்.ஹஸன் அப்துல் காதிர் பி.இ.
ஹாஜி எம்.ஐ.ஷேக் தாவூத்
உறுப்பினர்கள்:
(01) ஜனாப் எஸ்.எம்.பி.தைக்கா தம்பி
(02) ஜனாப் எஸ்.இ.அமானுல்லாஹ்
(03) ஹாஜி வி.எஸ்.எஸ்.சித்தீக்
(04) ஜனாப் எஸ்.எம்.ஹபீப் முஹம்மத்
(05) ஹாஜி சேட் எம்.கே.எம்.இப்றாஹீம்
(06) ஹாஜி எம்.ஏ.செய்யித் அப்துல் காதிர்
(07) ஹாஜி கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ
(08) ஹாஜி எம்.ஏ.கே.மகுதூம் கண் சாஹிப்
(09) ஹாஜி யு.எம்.மீராஸாஹிப்
(10) ஹாஜி கே.ஏ.எஸ்.மக்பூல் அஹ்மத்
(11) மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ
(12) மவ்லவீ ஹாஃபிழ் ஜே.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ
(13) ஹாஜி கே.எஸ்.ஸாலிஹ்
(14) ஹாஜி எம்.ஐ.காதர் சுலைமான்
(15) ஹாஃபிழ் கே.எஸ்.எம்.முஹம்மத் இர்ஷாத்
இக்குழுவினர் சார்பாக, அன்பின் காயலர்களாகிய உங்களிடம் நாங்கள் தெரிவிக்க விரும்புவது யாதெனில்,
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரீ 1432 - ஆகஸ்ட் 2011 புனித ரமழான் மாதம் நமது பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை வழமை போல சிறப்பான முறையில் நடத்துவதென்றும், அதற்காக நமது பள்ளியில் கஞ்சி தயாரிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!
மேற்படி இஃப்தார் நிகழ்ச்சியையும் மற்றும் தராவீஹ் தொழுகை, வித்ரிய்யா போன்றவற்றையும் நன்முறையில் நடத்துவதற்கு ஏற்படும் செலவு வகைக்காக தாராள மனம் படைத்த நமது காயலர்களை நாடுவதென முடிவு செய்துள்ளோம்.
இப்புதிய பள்ளி துவக்கப்பட்ட ஆண்டு முதல் மிகச் சிறப்பான முறையில் இஃப்தார் மற்றும் அனைத்து நிகழ்வுகளும் இறையருளால் நடந்தேறியதை தாங்கள் நன்கறிவீர்கள். இன்ஷாஅல்லாஹ் இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடத்த தங்களின் மேலான ஒத்துழைப்பை நம்பிக்கையுடன் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
விலைவாசி உயர்ந்துள்ள இக்கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நன்கொடை வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.
வல்ல இறைவன் நம் ஹலாலான நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி, நமக்கு நல்ல உடல் நலனையும், வளமான வாழ்வையும், ஈருலக நற்பேறுகளையும் நிறைவாகத் தந்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |