காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளிவாசலின் புதிய முத்தவல்லியாக ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அப்பள்ளியில் முத்தவல்லியாக இருந்த ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ அவர்கள், 27.06.2011 அன்று காலமானார். 28.06.2011 அன்று அவரது நல்லடக்கத்திற்குப் பின் அப்பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அப்பள்ளி நிர்வாகத்தின் ஒரே பொறுப்பான முத்தவல்லி பொறுப்பு வெற்றிடமானதைத் தொடர்ந்து, அதற்கு புதிதாக ஒருவரைத் தேர்வு செய்வதற்கான ஜமாஅத் கூட்டம் 07.07.2011 அன்று மாலை 05.00 மணிக்கு பள்ளி வளாகத்தில், ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஐ.மீராஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மறைந்த முத்தவல்லி ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இக்கூட்டத்தின் நோக்கம் குறித்தும் ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மத் உரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டது.
அத்துடன், அப்பள்ளியின் புதிய முத்தவல்லியாக ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் அவர்களும், அவருக்குத் துணையிருந்து பள்ளி நிர்வாகப் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்காக ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவாக, பள்ளி இமாம் ஹாஜி அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
அஹ்மத் நெய்னார் பள்ளி சார்பாக,
முஹம்மத் அப்துல் காதர் (மம்மினாகார்),
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம். |