தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
மூன்றாம் நாளான ஜூலை 10 அன்று அழைக்கப்பட்ட 3097 மாணவர்களில், 2661 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 7 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. மூன்றாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 40,334 (1,685 + 398 + 38,251)
BC (Muslim) - 4,746 (212 + 92 + 4,442)
BC - 35,240 (1,543 + 485 + 33,212)
MBC - 27,228 (1,203 + 575 + 25,450)
SC (Arunthathiyar) - 4,194 (219 + 136 + 3,839)
SC - 20,901 (1,017 + 672 + 19,158)
ST - 1,393 (76 + 46 + 1,271)
மொத்தம் - 134,036 (6,009 + 2,404 + 125,623)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 2,967
BC (Muslim) - 146
BC - 1,793
MBC - 746
SC (Arunthathiyar) - 11
SC - 88
ST - 1
FOC - 24
மொத்தம் - 5,776 |